போலீஸ்காரருக்கு பொது இடத்தில் 'முத்தம்' .. வீடியோ வெளியாகி எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை..
கோவை குளக்கரையில் இளம் பெண் ஒருவர் காவல்துறை அதிகாரிக்கு முத்தம் கொடுத்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து அந்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கோவையை அடுத்த உக்கடம் சுங்கம் பைபாஸ் ரோட்டில் ஸ்மார்ட்சிட்டி பார்க்கில் ஒரு காவல்துறை அதிகாரி சீருடையில் அமர்ந்திருந்தார். அவருக்கு அருகில் இளம் பெண் ஒருவர் முகத்தை துணியால் மூடியபடி அமர்ந்திருந்தார். இருவரும் மிக நீண்ட நேரமாக ஜாலியாக பேசி கொண்டிருந்தபோது அந்த இளம்பெண், அருகில் இருந்த போலீஸ்காரருக்கு எதிர்ப்பாராத நேரத்தில் திடீரென முத்தம் கொடுத்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த நபர் ஒருவர் அந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
அதைத்தொடர்ந்து, வீடியோ எடுத்த அந்த நபர், அவர்களுக்கு அருகில் சென்று நீங்க போலீசா இருக்கீங்க, பொது இடத்துல இப்படி நடந்துக்கலாமா ? நீங்க காதலரா, கணவன்-மனைவியா? என்ன உறவு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு அந்த போலீஸ்காரர், பதில் சொல்ல முடியாமல் திணறி அந்த பார்க்கில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை தொடர்ந்து, போலீஸ் உயரதிகாரிகளின் பார்வைக்கும் சென்றது. இதைத்தொடர்ந்து மாநகர போலீசார் நடத்திய விசாரணையில், பார்க்கில் அமர்ந்து பேசியது கோவை ஆயுதப்படை பிரிவில் பணிபுரிந்து வந்த 32 வயதான போலீஸ்காரர் பாலாஜி என்றும், இவருக்கு ஏற்கனவே காதல் திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், பாலாஜியை முத்தமிட்டது அவரது உறவினர் பெண் என்ற அதிர்ச்சிகர தகவலும் கிடைத்துள்ளது.
இதையடுத்து, கோவை மாநகர ஆயுதப்படை துணை கமிஷனர் முரளிதரன் சீருடையில் பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக பாலாஜியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..