இந்த அனுபவம் ரமேஷை உளவியல் ரீதியாக சிதைத்துவிட்டது. அவரது உறவினர் சன்னி, பி.டி.ஐக்கு அளித்த பேட்டியில், “அவரது சகோதரரின் மரணம், அந்த இடத்தில் கண்ட கொடூர காட்சிகள் – இவை எல்லாம் இன்னும் அவரை மிகவும் பாதித்து மன உலைச்சலுக்கு ஆளாக்கு உள்ளது. பலர் அவரை தொடர்பு கொள்ள முயலுகிறார்கள். வெளிநாட்டிலிருந்தும் உறவுகள் போன் செய்கிறார்கள். ஆனால் அவர் யாருடனும் பேசுவதில்லை. இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. நள்ளிரவில் எழுந்துவிட்டு தூங்க முடியாமல் தவிக்கிறார்” என்று கூறினார்.
மனநல ஆலோசனை தேவைப்படுமென்று உணர்ந்த அவரது குடும்பம், சமீபத்தில் ஒரு உளவியலாளரிடம் அவரை அழைத்துச் சென்றது. தற்போது ரமேஷ் சிகிச்சையைத் தொடங்கியுள்ளார். ஆனால் லண்டனுக்குத் திரும்ப சென்று அங்கு என்ன செய்வது என்று கூட அவர் முடிவெடுக்கவில்லை என்கிறார் சன்னி.
மனமுடைந்த ரமேஷ்
ஜூன் 17 அன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ரமேஷ், தாத்தாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார். அங்கு அவர் உடைந்து அழுததையும், மிகவும் மன உளைச்சலில் சிக்கியிருந்ததையும் உறவினர்கள் கூறுகிறார்கள்.
உயிர் பிழைத்ததாலே வருகிற ஒவ்வொரு நாளும் ஒரு சுமையாகவே அவருக்கு மாறியுள்ளது. சிகிச்சையின் வழியாக அந்த சுமையை இறுக்காமல் சீராக அடக்க முடியுமா என்பது, இனி காலமே பதிலளிக்க வேண்டிய நிலை உள்ளது























