மேலும் அறிய
Potato Fry : சுவையான உருளைக்கிழங்கு பொரியல்.. சாம்பார், ரசம், தயிர் சாதத்திற்கு சூப்பராக இருக்கும்!
Potato Fry : எந்த சாதம் செய்தாலும், இந்த உருளைக்கிழங்கு பொரியலை வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

உருளைக்கிழங்கு பொரியல்
1/6

தேவையான பொருட்கள்: 1 கப் உருளைக்கிழங்கு , 1 தேக்கரண்டி கொத்தமல்லி , 2 காய்ந்த சிவப்பு மிளகாய், உப்பு , 2-3 தேக்கரண்டி எண்ணெய், கறிவேப்பிலைகள், மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை 1/4 தேக்கரண்டி கடுகு , 1/4 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, கொத்தமல்லி இலைகள்
2/6

செய்முறை: முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து உரித்து எடுத்துக்கொள்ளவும். பின் அதன் சின்ன சின்ன துண்டாக நறுக்கிக்கொள்ளவும்.
3/6

அடுத்தது கொத்தமல்லி , காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்டாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
4/6

அடுத்தது நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை அரைத்த மசாலாவுடன் கலந்து கொள்ளவும்.அதன் பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து பொரியும் வரை காத்திருக்கவும்.
5/6

அடுத்தது கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதன்பின் மசாலாவில் கலந்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து கிளறிவிடவும்.
6/6

அடுப்பை குறைந்த தீயில் வைத்து 4 -5 நிமிடம் வரை மூடி வைக்கவும். கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து இறக்கினால் காரசமான உருளைக்கிழங்கு பொரியல் தயார்.
Published at : 18 Jun 2024 11:13 AM (IST)
Tags :
South Indian Recipesமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion