போதை ஏறாமல் கமல்ஹாசனுக்கு போன் பண்ணுன ரஜினிகாந்த் - ஏன்? எதுக்கு?
நடிகர் ரஜினிகாந்த் மது அருந்திவிட்டு ஒரு முறை பிரபல நடிகர் கமல்ஹாசனுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து என்ன சொன்னார்? என்பதை கீழே காணலாம்.

இந்திய சினிமாவின் அடையாளங்களாக உலகளவில் அறியப்படுபவர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவை ராஜ்ஜியம் செய்து கொண்டு வருபவர்கள். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட இவர்கள் இருவரும் ஏராளமான ப்ளாக்பஸ்டர் படங்களை தந்துள்ளனர்.
நடிகர் கமல்ஹாசனின் திரை வாழ்வில் என்றுமே தவிர்க்க முடியாத திரைப்படங்களில் நாயகன் ஒன்றாகும். காலத்திற்கும் ரசிகர்களால் பாராட்டப்படும் படம் இந்த படம் ஆகும். இ்ந்த படம் குறித்து ரஜினிகாந்த் என்ன சொன்னார்? என்று பிரபல இயக்குனர் பி.வாசு நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
தண்ணியை போட்டு போன் செய்த ரஜினி:
அதில் பேசிய பி.வாசு, " ரஜினி சாரிடம் நாயகன் படம் பாத்து நான் பைத்தியம் ஆகிட்டேன் சார். நீங்க இன்னும் அந்த மாதிரி ஒரு படம் பண்ணல சார். அப்போ அவரு சொன்னாரு. ஒன்னு தெரியுமா? நான் நாயகன் பாத்துட்டு வந்து கிளாஸ்ல ( மது) அடிச்சேன். எனக்கு ஏறல. திரும்பவும் அடிச்சேன். அப்போவும் ஏறல. 3வதும் அடிச்சேன். அப்போவும் ஏறல.
உடனே கமலுக்கு போன் பண்ணேன். கமல் சொல்லுங்க ரஜினினு சொன்னாரு. 3 பெக்கை விட வேலு நாயக்கர் போதை அதிகமா இருக்குனு சொன்னேன் அப்படினு சொன்னாரு" இவ்வாறு அந்த நேர்காணலில் பி.வாசு பகிர்ந்திருப்பார்.
காலத்தை கடந்து நிற்கும் நாயகன்:
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சரண்யா, ஜனகராஜ், நாசர் ஆகியோர் நடித்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருப்பார். பம்பாயில் வளரும் ஒரு தமிழ் இளைஞன் எப்படி மும்பையையே கட்டி ஆளும் அளவிற்கு ஒரு தாதாவாக மாறுகிறார் என்பதே கதைக்களம். இளம் பருவம் முதல் மரணம் வரை நடக்கும் நிகழ்வாக இந்த படத்தை மணிரத்னம் நகர்த்தியிருப்பார். கமல்ஹாசன் தனது நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டிருப்பார்.
ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் இணைந்து தொடக்க காலத்தில் பல படங்களில் நடித்துள்ளனர். பின்னர், தங்களது வளர்ச்சிக்காக இருவரும் தனித்தனியாக நடிக்கத் தொடங்கினர். ஆனாலும், நல்ல நண்பர்களாக இன்றும் இருக்கின்றனர்.
வெற்றி இயக்குனர்:
பி.வாசு ரஜினிகாந்தை வைத்து பணக்காரன், மன்னன், உழைப்பாளி, சந்திரமுகி மற்றும் குசேலன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதில் குசேலன் தவிர மற்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்கள் ஆகும். தமிழ் மற்றும் கன்னடத்தில் ஏராளமான படங்களை இயக்கியுள்ள பி.வாசு தமிழில் ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், பார்த்திபன், அஜித்குமார், பிரபுதேவா ஆகிய பல ஹீரோக்களை வைத்து படத்தை இயக்கியிருந்தாலும் கமல்ஹாசனை வைத்து ஒரு படம் கூட இயக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





















