IPL MI vs GT Eliminator: இப்படி ஆயிடுச்சே... எலிமினேட்டரில் எலிமினேட் ஆன மும்பையின் முக்கிய வீரர்கள் - யாருங்க அது?
எலிமினேட்டர் போட்டியில் இன்று நடக்கும் மும்பை? குஜராத்? அணிகளுக்கு இடையேயான போட்டியில் முக்கியமான மும்பை வீரர்கள் காயத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்திற்கு வந்துள்ளது. சண்டிகரில் நேற்று நடந்த குவாலிஃபயர் 1 போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த நிலையில் இறுதிப்போட்டிக்குச் செல்ல குஜராத், மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மத்தியில் மல்லுகட்டு ஏற்பட்டுள்ளது.
மும்பையா? குஜராத்தா?
இந்த விறுவிறுப்பான சூழலில், இந்த தொடரை விட்டு வெளியேறப்போவது யார்? இந்த தொடரின் குவாலிஃபயர் 2ல் விளையாடப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் எலிமினேட்டர் போட்டி இன்று நடக்கிறது. இந்த போட்டியில் புள்ளிப்பட்டியலில் 3வது இடம் பிடித்த குஜராத் - புள்ளிப்பட்டியலில் 4வது இடம் பிடித்த மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
காயத்தில் மும்பையின் நட்சத்திரங்கள்:
முன்னாள் சாம்பியன்களான இந்த இரு அணிகளுமே மிகவும் பலம் வாய்ந்த அணிகளே ஆகும். முல்லன்பூரில் இன்று நடக்க உள்ள இந்த போட்டியில் இந்த இரு அணிகளும் தங்களது முழு பலத்தை வெளிக்காட்டி ஆடினால் மட்டுமே இறுதிப்போட்டி போட்டியில் நீடிக்க முடியும்.
இந்த இக்கட்டான சூழலில் மும்பை அணிக்கு பின்னடைவாக அந்த அணியின் முக்கிய வீரர்கள் இருவருக்கு காயம் என்று தகவல் வெளியாகியுள்ளது. எலிமினேட்டர் போட்டியில் ஆடுவதற்காக சண்டிகர் வந்த வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் தனது முழங்காலில் காலில் அடிபட்டால் அணியும் பட்டை அணிந்து வந்திருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், அவர் நடக்க இயலாமல் நடந்து சென்றார். இது மும்பை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Seems Both Tilak Varma & Deepak Chahar Unlikely to Play The Eliminator Against GT. in Recent Video Both Looked Limping While Travelling to Mullanpur. Its Ain't Looking Good Bruv 🚶 pic.twitter.com/aqdqAO6kRS
— яιşнí. (@BellaDon_3z) May 29, 2025
மும்பைக்கு பின்னடைவா?
இந்த தொடரில் மும்பை அணிக்கு முக்கிய பலமாக திகழும் தீபக் சாஹர் முக்கியத்துவம் வாய்ந்த எலிமினேட்டர் போட்டியில் ஆடாவிட்டால் மும்பை அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும். ட்ரென்ட் போல்ட், பும்ராவுடன் இணைந்து பக்கபலமாக தீபக் சாஹர் திகழ்ந்து வருகிறார். இந்த சூழலில் அவர் ப்ளேயிங் லெவனில் ஆடப்போவதில்லை என்பது மும்பை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அந்த அணியின் நட்சத்திர அதிரடி பேட்ஸ்மேனான திலக் வர்மாவும் காயத்தில் அவதிப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த அணியின் முக்கிய வீரர்களான ரியான் ரிக்கெல்டன், வில் ஜேக்ஸ் சொந்த நாட்டிற்காக தேசிய போட்டிகளில் ஆடச் சென்றுவிட்டதால் பேட்டிங் வரிசை பலவீனம் அடைந்துள்ளது. இந்த சூழலில் திலக்வர்மாவும் ஆடாதது அவர்களுக்கு பின்னடைவை உண்டாக்கியுள்ளது. அதேசமயம், மும்பை அணிக்காக பார்ஸ்டோ இன்றைய போட்டியில் களமிறங்க உள்ளார்.
குஜராத் முன்னேறுமா?
5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியில் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், போல்ட், பும்ரா உள்ளிட்ட பலம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். இவர்களை திறம்பட சமாளித்தால் மட்டுமே அகமதாபாத்தில் நடைபெற உள்ள குவாலிஃபயர் போட்டிக்கு குஜராத் தகுதி பெறும்.




















