அவசரப்பட வேணாம்.. பொறுமையாக கூட வருமான வரி செலுத்துங்க.. காலக்கெடு நீட்டிப்பு
வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.

மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT), 2024 - 2025 நிதியாண்டிற்கான வருமான வரி அறிக்கைகள் அல்லது திருத்தப்பட்ட வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரி தாக்கல் செய்வதற்கு வரும் ஜூலை மாதம் 31ஆம் தேதி வரை முன்னதாக கால அவகாசம் வழங்கப்பட்டது.
வருமான வரியை பொறுமையாக கூட தாக்கல் செய்யுங்கள்:
இந்த நிலையில், வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
🔴🔴💥 Big breaking:
— CA Bimal Jain (@BimalGST) May 27, 2025
CBDT has decided to extend the due date of filing of ITRs, which are due for filing by 31st July 2025, to 15th September 2025
This extension will provide more time due to significant revisions in ITR forms, system development needs, and TDS credit… pic.twitter.com/s92heYQtwI
காலக்கெடுவை தவறவிட்டால் என்னாகும்?
செப்டம்பர் 15ஆம் தேதி அன்று உங்கள் வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான ஆரம்ப காலக்கெடுவை நீங்கள் தவறவிட்டாலும், தாமதமாகவும் நீங்கள் அதை தாக்கல் செய்யலாம். இருப்பினும், அதற்கு நீங்கள் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.
- ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு தாமதக் கட்டணம் ரூ. 1,000.
- ரூ.5 லட்சத்துக்கும் அதிகமான வருமானத்திற்கு தாமதக் கட்டணம் ரூ. 5,000.
தாமதக் கட்டணத்தைத் தவிர, ஏதேனும் வரி நிலுவையில் இருந்தால், பிரிவு 234A இன் கீழ் நீங்கள் வட்டியைச் செலுத்த வேண்டியிருக்கும். இந்த வட்டி மாதத்திற்கு 1% அல்லது அசல் நிலுவைத் தேதியிலிருந்து (September 15, 2025) தாக்கல் செய்யும் தேதி வரை கணக்கிடப்படுகிறது.
இதையும் படிக்க: Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?




















