கிளாமர் பக்கம் திரும்பிய சாய் பல்லவி ? இணையத்தில் வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சி
Sai Pallavi : நடிகை சாய் பல்லவியின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சாய் பல்லவி
பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான சாய் பல்லவி தமிழ் , இந்தி , மலையாளர், தெலுங்கு என அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தார். தமிழில் தொடர்ச்சியாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சாய் பல்லவிக்கு ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பும் மதிப்பும் இருந்து வருகிறது. மற்ற நடிகைகளை சினிமா தவிர்த்து தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ச்சியாக வீடியோக்கள் வெளியிட்டு லைம்லைட்டில் இருக்க முயற்சி செய்துவரும் சூழலில் தான் நடிக்கும் கதாபாத்திரங்களில் வழியாக மட்டுமே ரசிகர்களின் மதிப்பை பெற்றவர் சாய் பல்லவி. சினிமா தவிர்த்து தனது குடும்பத்துடன் நேரம் செலவிடும் சாய் பல்லவி அதனை சமூக வலைதளங்களில் பகிர்வதில் பெரிதாக விருப்பம் காட்டுவதில்லை.
அதிர்ச்சி தந்த கிளாமர் கெட் அப்
கடந்த ஆண்டு அமரன் , இந்த ஆண்டு தண்டேல் என சாய் பல்லவி நடித்த இரு படங்கள் தொடர் வெற்றிப்படங்களாக அமைந்தன. தற்போது இந்தியில் சாய் பல்லவி நிதேஷ் திவாரி இயக்கும் ராமாயணம் திரைப்படம் சீதையாக நடித்து வருகிறார். ரன்பீர் கபூர் ராமராக நடிக்கிறார். இந்த படத்தில் சீதையாக சாய் பல்லவி நடிப்பதற்கு பல எதிர் கருத்துக்கள் வந்தன. இப்படியான நிலையில் சாய் பல்லவியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இதுவரை கிளாமராக உடை அணிந்து நடிக்காத சாய் பல்லவியா இப்படி என ரசிகர்கள் தங்கள் அதிர்ச்சியை தெரிவித்து வருகிறார்கள். இந்த இமேஜ் உண்மையானதா அல்லது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதா என்கிற கேள்வி இருந்து வருகிறது. இது குறித்து சாய் பல்லவி எந்த வித விளக்கமும் அளிக்கவில்லை.
When did this happened #SaiPallavi pic.twitter.com/VsXeZUU1vr
— TFI Sena 🎥⚔️ (@tfi_sena) May 31, 2025





















