ADMK TVK Alliance | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPS
அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று தவெக அறிவித்த பின்னரும், தவெக தலைவர் விஜய் குறித்து எந்த கருத்துகளையும் கூறவேண்டாம் என்று அதிமுக நிர்வாகிகளிடம் இபிஎஸ் strict ஆக சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் நாட்டில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான வேலைகளை இப்போதே கட்சிகள் தொடங்கிவிட்டன. பரபரப்பன இந்த அரசியல் சூழலில், அதிமுக மாவட்ட செயலாளார்கள் கூட்டம் நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இரண்டாவது நாளாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக மூத்த நிர்வாகிகள் மட்டும் மாவட்டசெயலார்கள் கலந்து கொண்டர். இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பூத் கமிட்டி கூட்டம் தொடர்பாகவும், மாநிலங்களைவை தேர்தலில் தங்களுக்கு இருக்கும் இரண்டு எம்.பி பதவிகளுக்கு யாரை தேர்ந்தெடுக்கலம் என்றும் தீவிர ஆலோசனை மேற்க்கொண்டதாக செய்திகள் வெளியாகின.
இச்சூழலில் தான் தவெக தலைவர் விஜயை அதிமுக நிர்வாகிகள் யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம் என்றும் தவெக தொடர்பாகவே அல்லது விஜய் தொடார்பாகவோ எந்த கருத்துக்களையும் பொதுவெளியில் பதிவு செய்ய வேண்டாம் என்றும் strict ஆக சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக கூட்டணியில் பாஜக இணைவதற்கு முன்னதாக தவெக அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. ஆனால், தவெக போட்ட நிபந்தனைகளை ஏற்கமுடியாத்தல் இந்த கூட்டணி இறுதிசெய்யப்படமால் போனதாகவும் சொல்லப்பட்டது. ஆனாலும் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருப்பதால் அரசியல் சூழல் எப்படி வேண்டுமானலும் மாறலாம் அதிமுக - தவெக கூட்டணி கூட அமையாலம் என்று இபிஎஸ் நம்புவதாக சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். அதனால் தான் அவர் விஜய் பற்றியோ அவர் கட்சி பற்றியோ எந்த கருத்தையும் சொல்லவேண்டாம் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறர் என்று சொல்கின்றனர் எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள்.





















