மேலும் அறிய

Kerala Lottery: அப்படி போடு.. கேரள லாட்டரி பரிசில் மிகப்பெரிய மாற்றம்.. மீண்டும் கொட்டப்போகும் பரிசு மழை

New Kerala Lottery Prize Structure: லாட்டரி டிக்கெட்டின் விலையான அடிப்படை தொகையில் பரிசுத்தொகை வழங்கும் முறை இனி இல்லை என்று கேரள அமைச்சர் தெரிவித்தார்.

கேரள லாட்டரியில் 50 ரூ டிக்கெட்டுக்கு இணையான பரிசு தொகை வழங்குவதை கைவிடப்படும் என கேரள நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். 

கேரள லாட்டரி

கேரள மாநில அரசு கேரள லாட்டரி திட்டத்தை நடத்தி வருகிறது. அனைத்து தனியார் லாட்டரிகளையும் தடை செய்த பின்னர் கேரள அரசு 1967ஆம் ஆண்டு கேரள மாநில லாட்டரிகளை அறிமுகப்படுத்தியது. பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் அரசு இதை நடத்துகிறது. 

2024ஆம் ஆண்டு நிலவரப்படி இத்துறையில் 500 பேர் பணிபுரிகின்றனர், 14 மாவட்ட அலுவலகங்கள், 21 துணை லாட்டரி அலுவலகங்கள், எர்ணாகுளத்தில் ஒரு பிராந்திய துணை இயக்குநரகம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள விகாஸ் பவனில் உள்ள இயக்குநரகம் என இந்தத் துறை பிரிக்கப்பட்டுள்ளது. முதலில் நிதித்துறையின் கீழ் இயங்கி வந்த லாட்டரி திட்டம் பின்னர், வரித்துறையின் கீழ் மாற்றப்பட்டது. 

கேரளாவின் நலத்திட்டங்கள்

லாட்டரி சீட்டு விற்பனை மூலம் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டியால் கேரளாவின் நலத்திட்டங்கள் பலனடைந்துள்ளன. மருத்துவ செலவுகளுக்கு பணம் செலுத்த முடியாத மக்களுக்கு நிதி உதவி வழங்க காருண்யா திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. 

புற்றுநோய், ஹீமோபிலியா, சிறுநீரகம் மற்றும் இதயப் பிரச்சனைகள் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் பின்தங்கிய மக்களுக்கு நிதியுதவி அளிப்பதும், நோய்த்தடுப்பு சிகிச்சையும் இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். ஒவ்வொரு மாதமும், நூற்றுக்கணக்கான குடும்பங்கள், கேரள லாட்டரியின் மூலம் வறுமையிலிருந்து தப்பிக்க முடிகிறது. ஒவ்வொரு நாளும் மதியம் 3 மணிக்கு, கோடிக்கணக்கான மதிப்புள்ள லாட்டரியை வெல்லும் நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆவலுடன் முடிவுகளை எதிர்பார்க்கிறார்கள். இதுவரை இதன்மூலம் சுமார் 27,000 பேர் பயனடைந்துள்ளனர். 

பரிசுத்தொகையில் மாற்றம்:

இந்நிலையில் லாட்டரி டிக்கெட்டின் விலையான அடிப்படை தொகையில் பரிசுத்தொகை வழங்கும் முறை இனி இல்லை என்று கேரள அமைச்சர் தெரிவித்தார்.

இது குறித்து பேசிய அவர் “ஜூன் முதல் வாரத்திலிருந்து லாட்டரி டிக்கெட்டின் மதிப்புக்கு சமமான பரிசுகளை வழங்குவதை மாநில அரசு நிறுத்தவுள்ளது. முகவர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் லாபகரமானதாகக் இல்லை என்பதால், டிக்கெட்டின் விலைக்கு சமமான ₹50 மதிப்புள்ள பரிசுகள் படிப்படியாக நிறுத்தப்படும் என்று நிதியமைச்சர் கே.என். பாலகோபால்  அறிவித்தார்.

பங்கேற்பை அதிகரிக்க, அரசாங்கம் ₹2,000 மற்றும் ₹200 பரிசுப் பிரிவுகளை மீண்டும் அறிமுகப்படுத்தி, ₹5,000 பரிசுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும். சுமார் 1.5 லட்சம் பேர் வருமானத்திற்காக லாட்டரித் துறையை நம்பியுள்ளனர். நலத்திட்ட முயற்சிகளுக்கு ஆண்டுதோறும் ₹43 கோடி ஒதுக்கப்படுவதாகவும் அமைச்சர் எடுத்துரைத்தார். 

பொறுப்புத் துறப்பு: லாட்டரிகள் புத்திசாலித்தனமாக மட்டுமே விளையாடப்பட வேண்டும், ஏனெனில் அவை அடிமையாகிவிடும். இந்தப் பக்கத்தின் உள்ளடக்கத்தை உத்வேகமாகவோ அல்லது வழிகாட்டியாகவோ பயன்படுத்தக் கூடாது; மாறாக, இந்த செய்திகள் கேரளாவில் லாட்டரி குறித்த தகவல்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே நோக்கம். ஏபிபி நாடு டிஜிட்டல் எந்த வகையிலும் லாட்டரிகளை விளம்பரப்படுத்தாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

How To Save ₹100 Every Day: ஒரு நாளுக்கு 100 ரூபாய் சேமித்தால் நிதி எதிர்காலம் எப்படி மாறும்? - : கோடீஸ்வரர் ஆகும் ரகசியம் இதுதான்!
ஒரு நாளுக்கு 100 ரூபாய் சேமித்தால் நிதி எதிர்காலம் எப்படி மாறும்? - : கோடீஸ்வரர் ஆகும் ரகசியம் இதுதான்!
LIVE | Kerala Lottery Result Today (03.08.2026): கேரளா பாக்யதாரா லாட்டரி முடிவுகள் இன்று- உங்கள் அதிர்ஷ்ட எண் வென்றதா?
LIVE | Kerala Lottery Result Today (03.08.2026): கேரளா பாக்யதாரா லாட்டரி முடிவுகள் இன்று- உங்கள் அதிர்ஷ்ட எண் வென்றதா?
PM SVANidhi Scheme: வட்டியில் சலுகை.. பிணையில்லாமல் ரூ.50 ஆயிரம் கடன்.. இந்த திட்டம் தெரியுமா?
PM SVANidhi Scheme: வட்டியில் சலுகை.. பிணையில்லாமல் ரூ.50 ஆயிரம் கடன்.. இந்த திட்டம் தெரியுமா?
Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Embed widget