Sai Sudharsan: பரவால தம்பி.. குஜராத்தை தாங்கிப் பிடித்த தமிழன்.. அனைத்து அணிக்கும் சிம்ம சொப்பனம் சாய் சுதர்சன்!
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து குஜராத் அணி வெளியேறினாலும் அந்த அணிக்காக ஆடிய தமிழக வீரர் சாய் சுதர்சன் 759 ரன்கள் விளாசி அசத்தினார்.

ஐபிஎல் தொடரில் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் மும்பை அணியிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த குஜராத் தொடரை விட்டு வெளியேறியது.
தனி ஆளாக போராடிய சாய் சுதர்சன்:
மும்பை அணி நிர்ணயித்த 229 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணிக்கு கேப்டன் சுப்மன்கில் 1 ரன்னில் அவுட்டாக, அதிரடி காட்டிய குசல் மெண்டிசும் 20 ரன்னில் அவுட்டாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்சனும் - வாஷிங்டன் சுந்தரும் போராடினர். குறிப்பாக, சாய் சுதர்சன் தனி ஆளாக மும்பையை அச்சுறுத்தினார்.
போல்ட், கிளெஸன், பாண்ட்யா, அஸ்வனி குமார் ஆகியோரது பந்துவீச்சை அலட்சியமாக ஆடிய சாய் சுதர்சன் பும்ராவை அடித்து ஆடினார். பும்ராவின் வேகத்திலே அவர் போல்டானார். இந்த தாெடர் முழுவதும் குஜராத் அணிக்காக மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார் சாய் சுதர்சன்.
759 ரன்கள்:
சென்னையைப் பூர்வீகமாக கொண்ட சாய் சுதர்சன் இந்த தொடரில் இதுவரை 759 ரன்களை குவித்துள்ளார். சராசரியாக 54.21 சதவீதம் ரன்களை இந்த தொடரில் எடுத்துள்ளார். 6 அரைசதங்கள், 1 சதம் விளாசியுள்ளார். இடது கை பேட்ஸ்மேனான 88 பவுண்டரிகள் மற்றும் 21 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.
TAMILAN DA 🫡🫡🫡🫡🔥
— Arun Vijay (@AVinthehousee) May 30, 2025
- 759 runs.
- 54.21 average.
- 156.21 strike rate.
- 6 Fifties.
- 1 hundred.
- 88 fours.
- 21 sixes.
GREAT FUTURE AHEAD FOR “SAI”#MIvsGT pic.twitter.com/fsYJIEMS43
இங்கிலாந்து தொடருக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் இடம்பிடித்துள்ள சாய் சுதர்சன் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த ஐபிஎல் சீசனிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன், இந்த சீசனிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த இடைப்பட்ட ஒரு ஆண்டில் உள்ளூர் கிரிக்கெட்டில் நன்றாக ஆடினார்.
வருங்கால இந்திய நட்சத்திரம்:
இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரமாக தமிழ்நாட்டில் இருந்து அஸ்வினுக்கு ஜொலிக்கும் வாய்ப்பு இவருக்கு உருவாகியுள்ளது. தொடரில் இருந்து குஜராத் வெளியேறினாலும் சாய் சுதர்சன் வசமே தற்போது வரை இந்த சீசனுக்கு அதிக ரன்கள் அடித்த வீரருக்கான ஆரஞ்ச் தொப்பி உள்ளது. 759 ரன்களுடன் முதலிடத்தில் உள்ள சாய் சுதர்சனுக்கும், அதற்கு அடுத்த இடத்தில் உள்ள சூர்யகுமார் யாதவிற்கும் 86 ரன்கள் வித்தியாசம் உள்ளது. சாய் சுதர்சன் ஐபிஎல் தொடர் மட்டுமின்றி இந்திய அணியிலும் மிகப்பெரிய நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.




















