பழிவாங்கும் படலத்தை துவங்கிய அரசி! கழுத்தில் கத்தியை வைத்ததால் மிரண்டு போன குமரவேல் - பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்ரைய 494ஆவது எபிசோடில் அரசியின் பழிதீர்க்கும் சம்பவம் ஆரம்பமாகிறது. இதுகுறித்த காட்சிகள் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் இன்றைய 494ஆவது எபிசோடானது பாண்டியன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அரசியின் கல்யாணத்தை பற்றியே விசாரிக்கிறார்கள். அதன்பிறகு முத்துவேலுவின் மனைவி வடிவு அரசியை கண்டிக்கிறார். ஏற்கன்வே இருவரும் காதலித்து வீட்டிற்கு தெரிந்து பெரிய பிரச்சனை நடந்தது. அப்போதே நான் குமாரவேலுவை காதலிக்கிறேன். அவரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று வீட்டில் சொல்லியிருக்கலாம். அப்படியில்லை என்றால் எங்களிடம் சொல்லியிருக்கலாம்.
ராஜீ செய்த அதே தவறை தான் நீயும் இப்போது செய்திருக்கிறாய் என்று குமுறுகிறார். அப்போது குறுக்கிட்ட சுகன்யா குமாரை பிடிக்காது, அவரை நான் மறந்துவிட்டேன், அவரிடம் பேசமாட்டேன் என்றெல்லாம் சொன்னேல. அப்புறம் எப்படி கல்யாணம் பண்ணிக்கிட்ட என்று துருவி துருவி கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறார். எதுவுக்கு என்னிடம் கேட்குறீர்கள். அவரிடமும் கேளுங்கள் என்று குமரவேலுவை கை காட்டி விடுகிறார்.

தனது மகன் குமாரை மாரி கண்டிக்க தொடங்கிவிட்டார். ஏண்டா ராஜீ ஓடிப்போனது தெரியும்ல. அப்புறம் எதுக்குடா திருட்டுத்தனமாக கல்யாணம் பண்ணிக்கிட்ட என்று திட்டுகிறார். மிரட்டி கிரட்டி எதுவும் கல்யாணம் பண்ணயா? என்று மாரி கேட்க அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. நான் சொல்வதை கேளு, யார் கேட்டாலும் என்னிடம் பேசவில்லை என்று சொல், வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளைக்கு ஓகே சொல்லிடு என்று எல்லாவற்றிற்கும் பிளான் போட்டு கொடுத்தது இவருதான். அவரு சொல்றத தான் நான் கேட்டேன். கல்யாணத்துக்கு முதல் நாள் நாம் ஓடி போய் கல்யாணம் பண்ணிக்கிடலாம் என்று கூட சொன்னார்.
பிரச்சனை இப்படியே சென்று கொண்டிருக்க.. குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பாண்டியனை மகன்கள் கை தாங்கலாக வீட்டிற்குள் அழைத்து சென்றனர். அவர் மாடிக்கு சென்று படுத்துக் கொண்டார். அடுத்ததாக சுகன்யா கேள்வி மேல் கேள்விகளாக அரசியிடம் கேட்கிறார். ஆனால், அரசியோ இது எனக்கும் அவருக்கும் இடையில் உள்ள விஷயம். வேறு யாருக்கும் தெரியக் கூடாது என்று அவர் சொல்லிவிட்டார் என கூறுகிறார். இறுதியாக அரசி மற்றும் குமாரவேலு தொடர்பான காட்சிகள் இடம் பெறுகிறது. இதில், இத்தனை நாட்களாக தன்னை மிரட்டி வந்த குமாரவேலுவை அரசி மிரட்ட தொடங்குகிறார்.
கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டுகிறார். உன் வீட்டாரை அசிங்கப்படுத்தவே உன்னை காதலிப்பதாக நடித்தேன். உன் கழுத்திலிருக்கும் தாலிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல் என்று குமாரவேலு சொல்ல சொல்கிறார். ஆனால், அதெல்லாம் முடியாது என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.அதோடு, நீங்களே போய் சொல்லுங்கள். நான் தான் இவளை ஏமாற்றி வர வழைத்தேன். நான் தான் ஒரு இரவு முழுவதும் இவரை கடத்தி வைத்திருந்தேன். கல்யாணத்தை நிறுத்தி அரசி குடும்பத்தை அசிங்கப்படுத்தவே இதையெல்லாம் செய்தேன் என்று சொல்லுங்கள் என்று அரசி அடுக்கடுக்காக பேசுகிறார். அரசி பேசுவதையெல்லாம் கேட்டு அதிர்ச்சி அடைந்த குமாரவேலுவால் ஒன்று கூட பேச முடியவில்லை.
மேலும், தான் இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து, குமாரவேலு கழுத்தில் வைத்து மிரட்டுகிறார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முடிவடைந்துள்ளது.






















