தந்தை, மகன் மோதல்... எனக்கு ரொம்ப மனவேதனை இருக்கு... கண்கலங்கிய ஜி.கே.மணி
கெளரவ தலைவர் ஜி. கே.மணி, கட்சி நிர்வாகிகள் யாருக்கும் சொல்லாமல் குடும்பத்துடன் தலைமறைவாகுவது அல்லது தன் உயிரை துறப்பது என முடிவு.

விழுப்புரம்: பாமகவின் தந்தை மகனுக்குமான பிரச்சனையில் கெளரவ தலைவர் ஜி.கே.மணி இரண்டு முடிவு எடுத்துள்ளதாகவும் அதில் ஒன்று கட்சி நிர்வாகிகள் யாருக்கும் சொல்லாமல் குடும்பத்துடன் தலைமறைவாகுவது அல்லது தன் உயிரை துறப்பது என முடிவெடுத்துள்ளதாக நா தழு தழுக்க தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிர்வாகிகள் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்தனர். ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த சரவணனை நீக்கிவிட்டு லோகநாதன் என்பவரை ராமதாஸ் நியமனம் செய்தார்.
ராமதாசை சந்திப்பதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த கெளரவ தலைவர் ஜி.கே.மணி, இது உட்கட்சி பிரச்சனை இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் சூழ்நிலையில் நாங்கள் இல்லை என்றும் நான் கட்சிக்கும், ராமதாசுக்கும், அன்புமணிக்கும் உண்மையாக இருக்க வேண்டும் என நினைப்பதாக தெரிவித்த அவர் தான் இரண்டு முடிவு எடுத்துள்ளதாகவும் அதில் ஒன்று கட்சி நிர்வாகிகள் யாருக்கும் சொல்லாமல் குடும்பத்துடன் தலைமறைவாகுவது அல்லது தன் உயிரை துறக்கு முடிவெடுத்துள்ளதாக நா தழு தழுக்க தெரிவித்தார். தன்னால் அன்புமணிக்கும் ராமதாசுக்கும், ராமதாசுக்கு இடையே பிரச்சனை இல்லை, திலகபாமா தன்னால் தான் பிரச்சனை என கூறுகிறார் ஆனால் இல்லை அவருக்கு வாழ்த்துக்கள், என்றும் திலகபாமா பற்றி எந்த குறையும் நான் சொல்லல ஏன் பொறுப்பிலிருந்து எடுத்தீர்கள் என்று தான் பாமக ராமதாசிடம் கேட்டதாக தெரிவித்தார்.
பொறுப்பாளர்களை மாற்ற வேண்டாமென தொடர்ந்து மருத்துவர் ராமதாசிடம் வலியுறுத்தியதாகவும் மாத்தினால் என்ன ஆக போகிறது என கூறிய நிலையிலும் மருத்துவர் ராமதாஸ் மாற்றிவிட்டதாக கூறினார். அன்புமணி ராமதாசும், ராமதாசும் இணைய வேண்டும் என்று தான் இருவரிடமும் பேசி வருவதாகவும் அன்புமணியிடமும் பேசுவேன் என தெரிவித்தார். காய்ச்ச மரம் கல்லடி படும் என்று கூறினார்கள் அப்படி பட்டால் உதிர்ந்து போயிடும்,எனக்கு உள்ள மன உளைச்சல் சொல்ல முடியாத அளவிற்கு வேதனையாக உள்ளது.
பிரிவினைக்கு ஜி.கே மணி காரணம் என கூறுகிறார்கள் பல வருடம் அனுபவம் உள்ளவர் ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்தவர் அன்புமணி ராமதாஸ் இவர்களுக்கு தெரியாதா,யார் சொல்லியும் பிளவு இல்லை சந்தர்ப்ப சூழ்நிலையால் பிளவு பட்டிருக்கிறது. அன்புமணியை முன்னிலைப்படுத்தி அரசியல் அதிகாரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமென ஜி கே மணி கூறியுள்ளார்.





















