(Source: ECI | ABP NEWS)
அதை பற்றி வாய் திறக்காத தன்ஷிகா? விஷாலுடனான திருமணத்திற்கு ரூ.1000 கோடி வரதட்சணையா? பிரபலம் கூறிய தகவல்!
நடிகர் விஷாலுக்கும், நடிகை சாய் தன்ஷிகாவிற்கும் இடையே மலர்ந்த காதல் திருமணத்தில் முடிவடைய உள்ள நிலையில், வரதட்சணை பற்றிய தகவல் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஷால். செல்லமே படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகி, மத கஜ ராஜா படம் வரையில் பல படங்களில் நடித்து ஹிட்டும் கொடுத்துள்ளார். தற்போது 47 வயதாகும் விஷால் இதுவரையில் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், கடந்த 2019 ஆம் ஆண்டு விஷாலுக்கும் அனிஷா அல்லா ரெட்டிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமண பேச்சு முடிவுக்கு வந்தது.
அதன் முன் வரலட்சுமி சரத்குமார், லட்சுமி மேனன் போன்ற சில நடிகைகளுடன் காதல் கிசுகிசுப்பிலும் சிக்கினார் விஷால். அதுவும் இல்லை என்றானது. இந்த நிலையில் தான் இப்போது விஷால் திருமணத்திற்கு தயாராகி உள்ளார். தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பேட்டி ஒன்றில் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் தான் விஷாலுக்கும் சாய் தன்ஷிகாவிற்கும் இடையில் காதல் மலர்ந்த தகவல் உறுதியானது. மேலும் இவர்கள் இருவரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி விஷால் பிறந்த நாள் அன்று திருமணம் செய்து கொள்ள உள்ளதாக சாய் தன்ஷிகாவே யோகி டா பட விழாவில் அதிகார பூர்வமாக அறிவித்தார். தற்போது இது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் சேகுவேரா பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: கடந்த சில நாட்களாக விஷாலுக்கு திருமணம் நடக்க இருப்பதாக சோஷியல் மீடியாவில் பேச்சு அடிபட்டது. விஷாலுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்கனவே அவரது பெற்றோர் முயற்சி எடுத்து அது தோல்வியில் முடிந்தது. நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிந்த பிறகு தனது திருமணம் நடைபெறும் என்று விஷால் ஏற்கனவே கூறியிருந்தார். அதன்படி நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்பட இருக்கிறது.
வரும் ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தை முன்னிட்டு கட்டிடம் திறப்பு விழா நடத்தப்பட இருக்கிறது. தன்ஷிகாவும் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். பெரியளவிற்கு ஹிட் கொடுக்கவில்லை. விஷால் மற்றும் தன்ஷிகா இருவருக்கும் எப்படி காதல் மலர்ந்தது என்பது பற்றி யாருக்குமே தெரியாது. இதுவரையில் இருவரும் தங்களது காதலை ரகசியமாகவே வைத்திருந்தனர்.

டி ராஜேந்தர் மற்றும் தன்ஷிகா விவகாரத்தில் தன்ஷிகாவிற்கு ஆதரவாக விஷால் பேசியிருந்தார். அன்று முதல் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், விஷால் மற்றும் தன்ஷிகா காதல் விவகாரத்திற்கு பிறகு எப்போதெல்லாம் விஷாலுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த போது தன்ஷிகா அதைப் பற்றி எதுவும் பேசாமல் இருந்தது ஒரு புறம் கேள்வி எழுப்பியுள்ளது.
எது எப்படியோ இருவரும் திருமணத்திற்கு தயாராகிவிட்டனர். விஷாலுக்கு 47 வயதாகும் நிலையில் சாய் தன்ஷிகாவிற்கு 35 வயது தான் ஆகிறது. இருவருக்கும் இடையில் 12 வயது வித்தியாசம். இதுவரையில் இருவரும் அமைதி காத்து வந்த நிலையில் இப்போது திருமணத்திற்கும் ரெடியாகிவிட்டனர். விஷாலின் பிறந்தநாளான ஆகஸ்ட் 29ஆம் தேதி இவர்களது திருமணம் நடக்க இருப்பதாக தெரிகிறது. அதுவும் நடிகர் சங்க கட்டிடத்தில் தான் விஷால் மற்றும் சாய் தன்ஷிகா திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சங்கத்தில் எல்லா வசதிகளும் இருப்பதாக கூறப்படுகிறது. விஷாலை திருமணம் செய்து கொள்ள தன்ஷிகாவிற்கு ரூ.1000 கோடி வரதட்சணை கொடுக்க இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. ஆனால், இது எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்று அவர் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





















