மேலும் அறிய
Women Centric Movies : தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான டாப் 5 வுமன் சென்ட்ரிக் படங்கள்!
Top 5 Women centric movies : மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ் சினிமாவில் பெண்களை மையமாக வைத்து கடந்த 2022ம் ஆண்டு முதல் வெளியான சிறந்த 5 வுமன் சென்ட்ரிக் படங்களின் லிஸ்ட்டை பார்க்கலாம்.

வுமன் சென்ட்ரிக் படங்கள்
1/6

சமீப காலமாக வுமன் சென்ட்ரிக் படங்கள் அதிகமாக வெளியாகி வருகின்றன. மக்களும் இப்படங்களுக்கு நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.
2/6

கார்கி : பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட ஒரு சிறுமியின் இந்த அவல நிலைக்கு யார் காரணம் என்பதை அன்பு பாசத்திற்கு அப்பாற்பட்டு எடுத்துரைத்த ஒரு படம். இப்படத்தின் திரைக்கதை பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து ஒரு ஆண் குழந்தையை ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்த திரைப்படம்.
3/6

கண்ணகி : வெவ்வேறு பின்னணிகளை கொண்ட நான்கு பெண்கள் எதிர்கொள்ளும் சமகால பிரச்சினையை அடிப்படையாக கொண்டு முற்போக்குப் பார்வையுடன் அமைக்கப்பட்ட படம் 'கண்ணகி'
4/6

அயலி : தெய்வ வழிபாட்டை அடிப்படையாக கொண்டு கலாச்சாரம் பண்பாடு என்ற பெயரில் பெண்களை அடக்கும் ஆண்களுக்கு சரியான ஒரு பதிலடி கொடுக்கும் வகையில் துணிச்சலாக வெளியான படம் 'அயலி' .
5/6

பொன்மகள் வந்தாள் : குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து துணிச்சலாக பேசிய படம். பல ஆண்டுகளுக்கு முன்னர் குழிதோண்டி புதைக்கப்பட்ட ஒரு வழக்கை தோண்டி எடுத்து அதில் இருந்த அறியப்படாத உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து அடையாளப்படுத்திய படம் 'பொன்மகள் வந்தாள்'
6/6

சாணி காயிதம் : பெண் காவல்துறை அதிகாரியின் வாழ்க்கையையும் குடும்பத்தையும் சூறையாடிய கொடியவர்களை ரத்தம் தெரிய வெறி அடங்கும் வரை பழிதீர்க்கும் ஒரு படம் 'சாணி காயிதம்'.
Published at : 08 Mar 2024 03:03 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement