மேலும் அறிய

மதுரையில் மோசடி நடந்தது எப்படி? 27 லட்சம் இழந்த மூதாட்டி - தொண்டு நிறுவனம் மீதான புகார்!

வங்கியில் சேமிப்பு கணக்கில் இருந்த பணம் மற்றும் கடனாக பெற்று 27 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை ஸ்ரீ நேஷா தொண்டு நிறுவனத்தில் வைப்புத் தொகையாக செலுத்தி உள்ளார்.

மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்தவர் வயதான மூதாட்டி செல்வி. இவர் ஜெய்ஹிந்த்புரத்தில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு பழனியை சேர்ந்த ஸ்ரீ நேசா தொண்டு நிறுவனத்தின் அட்மின் சக்திவேல் என்பவர் செல்வி மூதாட்டிக்கு அறிமுகமானார். அவர் மூதாட்டி செல்வியிடம் நேஷா தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் செந்தில்குமாரை அறிமுகப்படுத்தினார். செந்தில்குமார் பழனியில் தொண்டு நிறுவனம் நடத்தி வருவதாகவும் பெண்களின் வளர்ச்சிக்காக தொழில் சார்ந்த சேவை செய்வது வருவதாகவும், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 


மதுரையில் மோசடி நடந்தது எப்படி? 27 லட்சம் இழந்த மூதாட்டி - தொண்டு நிறுவனம் மீதான புகார்!

மேலும் தனது தொண்டு நிறுவனத்தில் வைப்புத் தொகையாக பணம் கொடுத்தால் அதற்கு மாதம் , மாதம் இரண்டு சதவீதம் வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். செந்தில்குமார் மூதாட்டி செல்வியை பழனிக்கு அழைத்துச் சென்று அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வரும் தனது தாயார் தனலட்சுமி அறிமுகம் செய்து வைத்துள்ளார்.  செந்தில்குமார் மற்றும் தனலட்சுமி கூறிய ஆசை வார்த்தைகளை நம்பிய மூதாட்டி செல்வி தன்னிடம் இருந்த தங்க நகைகளை தேசிய வங்கியில் அடமானமாக வைத்தும், வங்கியில் சேமிப்பு கணக்கில் இருந்த பணம் மற்றும் கடனாக பெற்று 27 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை ஸ்ரீ நேஷா தொண்டு நிறுவனத்தில் வைப்புத் தொகையாக செலுத்தி உள்ளார்.


மதுரையில் மோசடி நடந்தது எப்படி? 27 லட்சம் இழந்த மூதாட்டி - தொண்டு நிறுவனம் மீதான புகார்!

தான் கொடுத்த பணத்திற்கு 20 மற்றும் 50 ரூபாய் மதிப்புள்ள அரசு முத்திரைத்தாளில் தன்னிடம் வாங்கிய தொகையை எழுதி பூர்த்தி செய்து கையொப்பமிட்டு செந்தில்குமார் கொடுத்துள்ளார். வாங்கின பணத்திற்கு அடமான பத்திரம் கொடுத்ததை உண்மை என நம்பிய மூதாட்டி செல்வி தனக்கு மாதம் வட்டி தொகை வரும் என நம்பிக் கொண்டிருந்தார். அதன்படி இரண்டு மாதம் ரூ 55,000 வீதம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் வட்டி பணத்தை செந்தில்குமார் மூதாட்டி செல்விக்கு கொடுத்துள்ளார்.  கடந்த 15 மாதங்களுக்கு மேலாக வட்டி பணம் செந்தில்குமார் கொடுக்கவில்லை.

இது தொடர்பாக செந்தில்குமாரின் செல்போன் எண்ணை மூதாட்டி செல்வி தொடர்பு கொண்டார் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது இதனை அடுத்து பழனிக்கு நேரில் சென்ற மூதாட்டி செல்வி ஸ்ரீ நேஷா தொண்டு நிறுவனத்தின் அலுவலகம் பூட்டப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனிடையே நிறுவனர் செந்தில்குமார் அவரது தாயார் தனலட்சுமி அறிமுகம் படுத்திய சக்திவேல் ஆகியோர் தலைமறைவானதாக கூறப்படுகிறது.


மதுரையில் மோசடி நடந்தது எப்படி? 27 லட்சம் இழந்த மூதாட்டி - தொண்டு நிறுவனம் மீதான புகார்!

மேலும் செந்தில்குமாரின் உறவினரான ஆடலுரை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் ஸ்ரீ நேஷா தொண்டு நிறுவனர் செந்தில்குமாரிடமிருந்து பணத்தை வாங்கித் தருவதாக கூறினார் ஆனால் இதுவரை ரூ.27,50,000 வாங்கித் தரவில்லை. ஆடலூர் ராமமூர்த்தியை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது பணத்தை கேட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மூதாட்டி செல்வி இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு  காவல் துறை கண்காணிப்பாளர் பிரதீப்பை நேரில் சந்தித்து தன்னுடைய உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், மோசடி செய்த பணத்தை பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை புகார்மனு அளித்தார். தற்பொழுது ஒரு வேளை சாப்பாட்டிற்கு மூதாட்டி செல்வி கஷ்டப்பட்டு வருவதாக தெரிவித்தார். செந்தில்குமார் இதுபோல் பலரிடமும் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரிகிறது.

தலைப்பு செய்திகள்

தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget