மேலும் அறிய
மதுரையில் ஒலிம்பிக் தர நீச்சல் குளம் & ஹாக்கி மைதானம்: இளைஞர்களின் கனவு நனவாகுமா?
மதுரையில் ரூ.9.47 கோடி மதிப்பில் செயற்கை ஹாக்கி மைதானம் கட்டும் பணிகளுக்கும், ரூ.10.50 கோடி மதிப்பில் டைவிங் வசதியுடன் கூடிய நீச்சல் குளம் அமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

புதிய நீச்சல்குளம் வசதி
Source : whats app
மதுரை மற்றும் கரூர் மாவட்ட விளையாட்டு வளாகங்களில் ரூ.18.78 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் புதிய நீச்சல் குளம் அமைத்தல், மதுரை, திருவண்ணாமலை, அரியலூர் மாவட்டங்களில் மொத்தம் ரூ.29.77 கோடி மதிப்பில் செயற்கை இழை ஆடுகளத்துடன் ஹாக்கி மைதானங்களை புதுப்பித்தல் ஆகிய பணிகள் நடைபெற உள்ளது.
ஹாக்கி மற்றும் நீச்சல் குளங்கள் அமைக்கும் பணி
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக இன்று (11.07.2025) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.9.47 கோடி மதிப்பில் செயற்கை இழை வளைகோல் பந்து மைதானம் (Hockey) கட்டும் பணிகளுக்கும், ரூ.10.50 கோடி மதிப்பில் டைவிங் வசதியுடன் கூடிய நீச்சல் குளம் அமைக்கும் பணிகளுக்கும் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
மதுரையில் ஒலிம்பிக் தரத்திலான நீச்சல்குளம்
மதுரை மாவட்டம் டாக்டர் எம்.ஜி.ஆர் விளையாட்டு அரங்கில் (ரேஸ்கோர்) ஒலிம்பிக் தரத்திலான டைவிங் வசதியுடன் கூடிய 50மீ x 25மீ அளவில் நீச்சல்குளம் அமைக்கவும், உலக இளையோர் வளைகோல்பந்து விளையாட்டுப் போட்டிகளை சிறப்பான முறையில் நடத்திட (Hockey) செயற்கையிழை வளைகோல்பந்து மைதானம் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளவும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, இன்றைய தினம் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.9.47 கோடி மதிப்பில் செயற்கை இழை வளைகோல் பந்து மைதானம் கட்டும் பணிகளுக்கும், ரூ.10.50 கோடி மதிப்பில் டைவிங் வசதியுடன் கூடிய நீச்சல் குளம் அமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
நீச்சல் மற்றும் ஹாக்கி மைதானம்
டைவிங் வசதியுடன் கூடிய 50மீ நீச்சல்குளம் அமைக்கப்பட்டால் தென் தமிழகத்தில் உள்ள நீச்சல் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொண்டு பதக்கம் வெல்வதற்கு வாய்ப்பாக அமையும். மதுரை மாவட்டத்தில் முதன்முறையாக உலக இளையோர் வளைகோல்பந்து விளையாட்டுப் போட்டிகள் நவம்பர் 2025 மற்றும் டிசம்பர் 2025 மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில், மதுரை, மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்




















