மயிலாடுதுறை வரும் தமிழக முதல்வர் - தடை விதித்த மாவட்ட ஆட்சியர்...
தமிழக முதலமைச்சர் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருவதை அடுத்து பாதுகாப்பு காரணங்களாலுக்காக ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்கான தேர்தல் வரவுள்ள நிலையில், அதற்கான ஆயத்த பணிகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதேபோன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று நலத்திட்ட உதவிகள் வழங்குதல், நிறைவற்ற அரசு திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், புதிய அறிவிப்புகளை வெளியிடுதல், ரோடு ஷோ போன்ற பல்வேறு நிகழ்வுகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக வருகின்ற ஜூலை 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அவர் பயணம் மேற்கொள்கிறார்.
மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு, பாதுகாப்பு கருதி இரண்டு நாட்களுக்கு ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை ஜூலை 15, 2025 அன்று தொடங்கி, ஜூலை 16, 2025 அன்று நள்ளிரவு 12 மணி வரை அமலில் இருக்கும் என மயிலாடுதுறையில் மாவட்ட மாவட்ட ஆட்சியர் ன ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
தமிழக முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள இருக்கிறார். இதையொட்டி, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே, வான்வழி கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல்களைத் தவிர்க்கும் நோக்கில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையின் நோக்கம்
பொதுமக்கள் பாதுகாப்பு, முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்பு, மற்றும் சட்ட ஒழுங்கைப் பேணுதல் ஆகியவற்றை உறுதி செய்வதே இந்தத் தடையின் முக்கிய நோக்கமாகும். அண்மைக்காலமாக ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள், சமூக விரோதச் செயல்களுக்கும், உளவு பார்க்கும் நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன. இத்தகைய சூழலில், முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் பாதுகாப்பை உறுதி செய்வது அத்தியாவசியமாகிறது. மேலும், இது போன்ற முக்கிய நிகழ்வுகளின்போது ஏற்படும் அசம்பாவிதங்களைத் தடுக்கவும், எந்தவிதமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் முன்கூட்டியே அகற்றவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
மீறினால் சட்ட நடவடிக்கை
மாவட்டம் முழுவதும் இந்தத் தடை உத்தரவு கடுமையாகப் பின்பற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ காந்த் எச்சரித்துள்ளது. ஜூலை 15, 2025 முதல் ஜூலை 16, 2025 அன்று நள்ளிரவு 12 மணி வரை, தடை செய்யப்பட்ட பகுதிகளில் ட்ரோன்கள் அல்லது வேறு எந்த வகையான ஆளில்லா வான்வழி வாகனங்களையும் பறக்கவிடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பொதுமக்களும், ட்ரோன் உரிமையாளர்களும் இந்த உத்தரவை முழுமையாகப் பின்பற்றி, மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம்
தமிழக முதலமைச்சரின் வருகை, மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்குப் புத்துயிர் அளிக்கும் வகையில் அமையும் எனவும், இத்தகைய முக்கிய நிகழ்வுகள் எந்தவித இடையூறும் இன்றி நடைபெறுவதற்கு மக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது. சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால், ட்ரோன் உபயோகிப்பாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என காவல் துறை வலியுறுத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, முதலமைச்சரின் பாதுகாப்பை உறுதி செய்வதில் எந்தவித சமரசமும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது. இந்தத் தற்காலிகத் தடை, முதலமைச்சரின் வருகை வெற்றிகரமாக அமையவும், பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவும் வழிவகுக்கும் என காவல்துறை வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது .






















