Karthigai Deepam: சுவாதியை சரக்கடிக்கச் சொன்ன தோழி.. குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய கார்த்தி - கார்த்திகை தீபத்தில் இன்று
கார்த்திகை தீபம் சீரியலில் சுவாதிக்கு அவளது தோழி மதுவை கலந்து கொடுத்த நிலையில், கார்த்திக் குழந்தையை காப்பாற்றியதை அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலுக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் ரேவதிக்கு பூ வாங்கி வைத்து விட, சுவாதியை அவளது தோழி பார்ட்டிக்கு அழைத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, சுவாதி பார்ட்டிக்கு செல்ல அவளது தோழி அவளை வரவேற்று சரக்கடிக்க சொல்கிறாள். சுவாதி எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை என்று சொல்ல, ஜூஸில் மதுவை கலந்து கொடுத்து விடுகின்றனர்.
கார்த்திக்கிற்காக ஆவேசப்பட்ட ரேவதி:
மறுபக்கம் கார்த்திக் மற்றும் ரேவதி என இருவரும் பர்த்டே பார்ட்டிக்கு வர அப்போது அங்கிருந்தவர்கள் கார்த்தியை ட்ரைவர் என கிண்டலடித்து பேசுகின்றனர். ரேவதி கடுப்பாகி போய் வேலைய பாருங்க என்று சத்தம் போட்டு கார்த்திக்கு ஆறுதல் சொல்கிறாள்.
அடுத்து பர்த் டே பேபி கையில் மருதாணி வைத்து கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு சிறிய ரூமுக்குள் விளையாட போய் ரூம் லாக்காகி மாட்டி கொள்கிறான். வீட்டில் இருப்பவர்கள் எல்லாரும் குழந்தையை தேட தொடங்குகின்றனர். ரூமுக்குள் குழந்தையை தேள் கொட்ட மயங்கியும் விடுகிறது.
குழந்தையை காப்பாற்றிய கார்த்திக்:
வெளியில் கார்த்திக் குழந்தை ரூமுக்குள் சென்றிருக்க தான் வாய்ப்பிருக்கு என எண்ணி கதவை திறக்க தேள் கொட்டி மயங்கி கிடப்பது தெரிய வருகிறது. உடனே டாக்டருக்கு போன் செய்து முதலுதவி என்ன செய்யணும் என்று கேட்டு அதை செய்து குழந்தையை காப்பாற்றுகிறான்.
அடுத்து ரூமுக்கு வந்து பார்க்க அங்கே சுவாதி இல்லை என்று தெரிய வருகிறது. ரிசப்ஷனில் விசாரிக்க அவள் ஒரு ஆட்டோவில் ஏறி வெளியே சென்றது தெரிய வருகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















