புதுச்சேரி PTU-வில் முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு! காலக்கெடு நீட்டிப்பு: உடனே விண்ணப்பியுங்கள்!
புதுச்சேரி: தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உள்ள எம்.டெக்., எம்.சி.ஏ., எம்.பி.ஏ., எம்.எஸ்சி.,மெட்ரீயல் சயின்ஸ் டெக்னாலஜி படிப்பிற்க்கு விண்ணபிக்க 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

புதுச்சேரி: தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உள்ள எம்.டெக்., எம்.சி.ஏ., எம்.பி.ஏ., எம்.எஸ்சி.,மெட்ரீயல் சயின்ஸ் டெக்னாலஜி படிப்பில் சேர கடந்த 1ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன அதற்கான காலக்கெடு 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக முதுநிலை சேர்க்கை குழு ஒருங்கிணைப்பாளர் செய்திக் குறிப்பு:
தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உள்ள எம்.டெக்., எம்.சி.ஏ., எம்.பி.ஏ., எம்.எஸ்சி.,மெட்ரீயல் சயின்ஸ் டெக்னாலஜி படிப்பில் சேர கடந்த 1ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. மாணவர்கள் ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பங்களை ஜூலை 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு இருந்த நிலையில், தங்களுக்கு மேலும் கால அவகாசம் வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று மாணவர்கள் விண்ணப்பிக்க வரும் 21ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டடுள்ளது. எனவே மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிற சான்றிதழ் நகல்களுடன் வரும் 24ம் தேதிக்குள் அலுவலகத்தில் நேரில் அல்லது அஞ்சல் வாயிலாக சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு www.ptuniv.edu.in அல்லது www.pgacpdy.in என்ற இணையதளத்தை பார்க்கவும். இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ( PTU ) என்பது மத்திய அரசு மற்றும் இந்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அரசு நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனம் (GFTI), பல்கலைக்கழக மானியக் குழுவின் ஒப்புதலுடன் பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரியை (PEC) மேம்படுத்துவதன் மூலம் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் பொது தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகமாகும் . PTU செப்டம்பர் 13, 2021 அன்று அப்போதைய இந்திய துணைத் தலைவரான எம். வெங்கையா நாயுடு அவர்களால் திறந்து வைக்கப்பட்டது . புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஒரு பொறியியல் நிறுவனத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஏழாவது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் 1984 இல் இந்தப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
அனைத்து பொறியியல் துறைகள் மற்றும் அடிப்படை அறிவியலிலும் MCA மற்றும் Ph.D. படிப்புகளைத் தவிர, முக்கிய பொறியியல் துறைகளில் ஒன்பது இளங்கலை மற்றும் பதின்மூன்று முதுகலை படிப்புகள் தற்போது பல்கலைக்கழகத்தில் வழங்கப்படுகின்றன. நிர்வாகத்திற்கான குறிப்பிடத்தக்க சுயாட்சியை கல்லூரி கொண்டுள்ளது.





















