சென்னையில் சாலையில் தாறுமாறாக ஓடி தலைகீழாக கவிழ்ந்த லாரி
சென்னையில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணாடி ஏற்றி வந்த லாரி
சென்னை ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார், கண்ணாடி உற்பத்தி செய்யும் தொழிற் சாலைகளில் இருந்து வெளி நாடுகளுக்கு அனுப்பப்படுவதற்காக சென்னை துறைமுகத்திற்கு கண்ணாடி பொருட்களை ஏற்றிக் கொண்டு நித்திஷ் என்ற ஓட்டுனர் லாரியை இயக்கி கொண்டு வந்துள்ளார்.
கட்டு பாட்டை மீறி இயங்கிய லாரி
அதிக பாரத்துடன் வந்த லாரி மணலி மஞ்சம்பாக்கத்தில் இருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக இயக்கிக் கொண்டு வந்திருக்கிறார். அப்போது எதிர் பாராதவிதமாக மணலி எம்.எஃப்.எல் சிக்னல் அருகே கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து தலை கீழாக கவிழ்ந்துள்ளது.
இதில் லாரியில் இருந்த கண்ணாடி பொருட்கள் சாலையில் சிதறியதால் , அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் கடும் அவதி அடைந்தனர். பிரதான சாலை என்பதால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த மணலி போக்குவரத்து போலீசார் கவிழ்ந்து கிடந்த லாரியை மீட்டு சிதறி கிடந்த கண்ணாடி பொருட்களை அகற்றி அப்புறப்படுத்தினர்.
மேலும் , இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய லாரி ஓட்டுனரை கைது செய்து அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்து கீழே விழும் காட்சிகள் தற்போது வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
போலியான ஆவணம் தயார் செய்து IOB வங்கியில் , வீட்டு கடன் பெற்ற வழக்கில் மேலும் 3 நபர்கள் கைது.
சென்னை ஈக்காட்டு தாங்கலில் உள்ள IOB வங்கி கிளை மேலாளர் சுகன்யா ( வயது 35 ) என்பவர் காவல் நிலையத்தில் , கொடுத்த புகார் மனுவில் கடந்த 2019 ம் ஆண்டு மேற்கண்ட வங்கியில் Sonex Builders உரிமையாளர்கள் காட்டாங்குளத்தூர் பகுதியில் கட்டப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 2 வீடுகளை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ததை மறைத்து , கதவு எண்களை மாற்றி , போலியான ஆவணங்கள் தயார் செய்து சிலருடன் கூட்டு சேர்ந்து , வங்கியில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து ரூ.60 லட்சம் கடன் பெற்று , கடனை திரும்பி செலுத்தாமல் ஏமாற்றியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார்.
அதன் பேரில் கடந்த 04.06.2025 அன்று , மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வுப் பிரிவில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
வங்கி மோசடி புலனாய்வு பிரிவு காவல் உதவி ஆணையாளர் மற்றும் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மேற்கொண்ட விசாரணையில் , Sonex Builders Partner நிறுவனத்தின் தேர்விஜயன் ( வயது 63 ) என்பவர் அவரிடம் வீடு வாங்குபவர்களுக்கு போலியான ஆவணங்களை தயார் செய்து கொடுத்து வங்கியில் சமர்பித்து வீட்டு கடன் பெற்று அதை வங்கிக்கு திரும்ப செலுத்தாமல் சுயலாபம் பெறும் நோக்கத்துடன் வங்கி மற்றும் பொது மக்களின் பணத்தை மோசடி செய்து சட்ட விரோதமாக ரூ.73,77,416/- பணம் சுயலாபம் அடைந்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
அதன் பேரில் Sonex Builders பங்குதாரரான வண்டலூரைச் சேர்ந்த தேர்விஜயன் ( வயது 63 ) என்பவர் கடந்த 08.07.2025 கைது செய்யப்பட்டு , நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். மேலும் காவல் குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு, மேற்படி வழக்கில் தொடர்புடைய தலைமறைவான நபர்களான சென்னை முகலிவாக்கம் பகுதியை சேர்ந்த நந்தினி ( வயது 31 ) அவரது கணவர் சுரேஷ் ( வயது 41 ) மற்றும் கீழ்கட்டளை பகுதியை சேர்ந்த கார்த்தி ( வயது 38 ) ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.





















