மேலும் அறிய
முதல் படமே டாப் ஹீரோவுடன்... ரூ.2200 கோடி வசூல்! யார் இந்த மணிரத்னம் பட நடிகை தெரியுமா?
முதல் படத்திலேயே 2200 கோடி வரை வசூல் செய்த படத்தில் நடித்த நடிகை யார் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? இவரைப் பற்றிய விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
2000 கோடி வசூல் செய்த மணிரத்னம் பட நடிகை யார் தெரியுமா?
1/9

திரை உலகில் அறிமுகமாகும் நடிகைகளுக்கு சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க வேண்டும் என்பது பெரும் கனவு. இது ஒரு சில நடிகைகளுக்கு நிஜமானாலும். பல நடிகைகள் வந்த வேகத்திலேயே சினிமாவில் இருந்து மூட்டையை கட்டி விடுகிறார்கள்.
2/9

மேலும் ஒரு சிலர் மட்டுமே சிறு கதாபாத்திரத்தில் நடித்தாலும், மிகப்பெரிய அளவுக்கு பிரபலத்தை அடைகிறார்கள். அந்த வகையில் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் இந்த நடிகை.
3/9

இவர் வேறு யாரும் அல்ல சமீபத்தில் கமல் மற்றும் மணிரத்னம் காம்போவில் வெளியான 'தக் லைப்' திரைப்படத்தில் ஜிங்குசான் பாடலுக்கு சிறப்பு தோற்றத்தில் டான்ஸ் ஆடி இருந்த நடிகை சானியா மல்கோத்ரா தான்.
4/9

33 வயதாகும் இவர், டெல்லியை பூர்வீகமாக கொண்டவர். கார்கி கல்லூரியில் தன்னுடைய பட்ட படிப்பை முடித்த பின்னர், 'டான்ஸ் இந்தியா டான்ஸ்' என்கிற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, 100 சிறந்த நடன கலைஞர்களில் ஒருவராக தேர்வானார்.
5/9

இதை தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகளை தேட துவங்கிய இவருக்கு, பாலிவுட் திரையுலகின் டாப் ஹீரோவான அமீர் கான் நடித்து தயாரித்த 'தங்கல்' திரைப்படத்தில் அமீர் கானுக்கு மகளாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
6/9

குத்து சண்டை வீராங்களைகளான, கீதா போகத் மற்றும் பபிதா குமாரி பற்றியும் அவருடைய தந்தை பற்றியும் விவரிக்கும் விதமாக எடுக்கப்பட்ட இந்த பியோ பிக் திரைப்படம், உலக அளவில் சுமார் 2200 கோடி வசூல் சாதனை செய்தது.
7/9

இந்த படத்தில், கீதா போகத் கதாபாத்திரத்தில் , பாத்திமா சனா சாஷிக் நடித்திருந்த நிலையில், பபிதா கதாபாத்திரத்தில், சானியா மல்ஹோத்ரா நடித்திருந்தார்.
8/9

ரூ.70 கோடியில் எடுக்கப்பட்டு, 2200 கோடி வரை வசூல் செய்த, இந்த படத்தில் அறிமுகமாகி... தன்னுடைய திறமையால் தற்போது பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக ஜொலித்து கொண்டிருக்கிறார் சானியா மல்ஹோத்ரா.
9/9

'தக் லைப்' திரைப்படத்தின் மூலம், கோலிவுட் திரையுலகிலும் அறிமுகமாகி உள்ள நிலையில், கூடிய விரைவில் இவர் தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளிலும், நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published at : 20 Jun 2025 07:08 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















