பேர் தெரியாது வாயில நுழையும்...த்ரிஷாவை வைத்து சீப் வாழைப்பழ ஜோக் அடித்த கமல்...என்ன ஆண்டவரே?
தக் லைஃப் படத்தின் ப்ரோமோஷனின் போது நடிகர் கமல்ஹாசன் த்ரிஷாவை விளையாட்டாக கலாய்த்து பேசியது சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

தக் லைஃப்
நாயகன் படத்தைத் தொடர்ந்து 38 ஆண்டுகளுக்குப் பின் மணிரத்னம் கமல் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தக் லைஃப் . சிம்பு , த்ரிஷா , ஐஸ்வர்யா லக்ஷ்மி , அசோக் செல்வன் , ஜோஜூ ஜார்ஜ் , அபிராமி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்லார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. வரும் ஜூன் 5 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டு படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தொடங்கின. இதில் கமல் , த்ரிஷா , சிம்பு , அசோக் செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.
த்ரிஷாவிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய கமல்
இந்த நிகழ்வில் பேசிய கமல் பிராமணராக இருந்து இரண்டு திருமணம் செய்துகொணடது பற்றிய கேள்விக்கு பதிலளித்தார். 15 ஆண்டுகளுக்கு முன் எம்.பி பிரிட்டாஸ் நீங்கள் ராமரை கும்பிடுபவராக இருந்து ஏன் இரண்டு திருமண செய்துகொண்டீர்கள் என்று கேட்டார். அதற்கு நான் ராமரின் தந்தை வகையறாவைச் சேர்ந்தவன் இன்னும் 49 ஆயிரத்து சொச்சம் திருமணம் பாக்கியிருப்பதாக பதிலளித்ததாக கமல் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் நடிகை த்ரிஷா தனது பழம்புரி ரொம்ப பிடிக்கும் என்று சொன்னார். பழம்புரி என்று சொல்லத் தெரியாமல் அவர் பாயில்டு பனானா என்று குறிப்பிட்டார். அப்போது அருகில் அமர்ந்திருந்த கமல் ' பெயர் சொல்லத் தேரியாது ஆனால் வாயில நுழைஞ்சிடும் ' என்று சொன்னது ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனங்கள் உருவாக்கி உள்ளது. பொதுவாக இந்த மாதிரியான இரட்டை அர்த்த கருத்துக்களை தெலுங்கு நடிகர்கள் சொல்வது வழக்கம். ஆனால் இந்த முறை அனைவரும் மேதை என போற்றும் கமல் இப்படியான ஒரு கருத்தை சொல்லியிர்ப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கமல் எந்த வித இரட்டை அர்த்தமும் இல்லாமல் இயல்பாகதான் இந்த கருத்தை வெளிப்படுத்தினார் என்று கமல் ரசிககர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Imagine the outrage if any Telugu senior hero passed the same comment. Disgusting!! pic.twitter.com/d7xhtYesMu
— Aakashavaani (@TheAakashavaani) April 21, 2025

