மேலும் அறிய

நாட்டுப்புற கலைப்பயிற்சி; நாளை முதல் மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?

17 வயதிற்கு மேற்பட்டவர்கள்‌ மற்றும்‌ 8ஆம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்‌ / தவறியவர்கள்‌ இப்பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள்‌.

நாட்டுப்புறக்‌ கலைகளைப்‌ பாதுகாக்கவும்‌, இளைய தலைமுறையினரிடையே நாட்டுப்புறக்‌ கலைகளைக் கொண்டு சேர்க்கவும்‌, என அரசின்‌ அறிவிப்பு திட்டத்தினை செயல்படுத்திடும்‌ பொருட்டு, 2024-2025 ஆம்‌ கல்வியாண்டு முதல்‌ பகுதிநேர நாட்டுப்புறக்‌ கலைப்பயிற்சி மையங்கள்‌ தோற்றுவிக்கப்பட்டன.

சென்னை, மதுரை, கோயம்புத்தூர்‌ மற்றும்‌ திருவையாறு அரசு இசைக்கல்லூரிகளிலும்‌, சென்னை, கும்பகோணம்‌ அரசு கவின்‌ கலைக்‌ கல்லூரிகளிலும்‌, மாமல்லபுரம்‌ அரசினர்‌ கட்டட மற்றும்‌ சிற்பக்‌ கலைக்‌ கல்லூரியிலும்‌, காஞ்சிபுரம்‌, திருவண்ணாமலை, சேலம்‌, கிருஷ்ணகிரி, விழுப்புரம்‌, கடலூர்‌, சீர்காழி, திருவாரூர்‌, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, பெரம்பலூர்‌, கரூர்‌, இராமநாதபுரம்‌, சிவகங்கை, ஈரோடு, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இடங்களில்‌ செயல்படும்‌ மாவட்ட அரசு இசைப்பள்ளிகளிலும்‌ மற்றும்‌ தஞ்சாவூர்‌ மண்டல கலை பண்பாட்டு மையம்‌ ஆகிய 25 இடங்களில்‌ இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

என்னென்ன கலைகள்?

கரகம்‌, தப்பாட்டம்‌, மரக்கால்‌ ஆட்டம்‌, சிலம்பாட்டம்‌, கும்மி, துடும்பாட்டம்‌, காவடியாட்டம்‌, ஜிக்காட்டம்‌, இசை நாடகம்‌, பேண்ட்‌ இசை, தோற்பாவைக் கூத்து, தெருக்கூத்து, புலியாட்டம்‌, கைச்சிலம்பாட்டம்‌, பெரிய மேளம்‌, பம்பை, கிராமியப்‌ பாட்டு, புரவியாட்டம்‌, கோல்கால்‌ ஆட்டம்‌, மல்லர்‌ கம்பம்‌, நைண்டி மேள தவில்‌, நாதஸ்வரம்‌, வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம்‌, சாமியாட்டம்‌, கோலாட்டம்‌, வள்ளிக்கும்மி, தேவராட்டம்‌, ஒயிலாட்டம்‌, கணியான்‌ கூத்து ஆகிய கலைகளில்‌ ஒவ்வொரு இடத்திலும்‌ நான்கு வகையான கலைகளில்‌ ஓராண்டு சான்றிதழ்‌ பயிற்சியாக வெள்ளிக்கிழமை மற்றும்‌ சனிக்கிழமைகளில்‌ மாலை 4.00 மணி முதல்‌ 6.00 மணி வரை நாட்டுப்புறக்‌ கலைப்‌ பயிற்சிகள்‌ நடைபெறுகின்றன.

தமிழ்நாடு டாக்டர்‌ ஜெ. ஜெயலலிதா இசை மற்றும்‌ கவின்‌கலைப்‌ பல்கலைக்‌ கழகத்தின்‌ இசைவு பெற்று இப்பயிற்சிகள்‌ நடத்தப்படுகின்றன.

நாளை முதல் மாணவர் சேர்க்கை

அவ்வகையில்‌ 2025-2026 ஆம்‌ கல்வியாண்டில்‌ பகுதி நேர நாட்டுப்புறக்‌ கலைப்பயிற்சி மையங்களில்‌ மாணவர்‌ சேர்க்கை 18.7.2025 முதல்‌ நடைபெற உள்ளது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

17 வயதிற்கு மேற்பட்டவர்கள்‌ மற்றும்‌ 8ஆம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்‌ / தவறியவர்கள்‌ இப்பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள்‌. நாட்டுப்புறக்‌ கலையில்‌ ஆர்வமிக்க கல்லூரி மாணவர்கள்‌ / இளைஞர்கள்‌ / பணிக்கு செல்பவர்கள்‌ / இல்லத்தரசிகள்‌ ஆகியோர்‌ இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்‌ கொண்டு, தமிழ்நாட்டின்‌ பாரம்பரிய நாட்டுப்புறக்‌ கலைகளில்‌ பயிற்சி பெறலாம்‌.

இப்பயிற்சி குறித்த விவரங்களையும்‌, பயிற்சியில்‌ சேருவதற்கான விண்ணப்பத்தினையும்‌ கலை பண்பாட்டுத் துறையின்‌ இணையதளத்தில்‌ (www.artandculture.tn.gov.in) இருந்து பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌ எனவும்‌ கலைப் பண்பாட்டுத் துறை சார்பில் தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது.

https://artandculture.tn.gov.in/node/add/collegeapplication என்ற படிவத்தின்கீழ், இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

தமிழகத்திற்கு வந்த 100 புதிய MBBS சீட்டுகள்! எந்தெந்த கல்லூரிகளுக்குத் தெரியுமா?
தமிழகத்திற்கு வந்த 100 புதிய MBBS சீட்டுகள்! எந்தெந்த கல்லூரிகளுக்குத் தெரியுமா?
வாக்குறுதி கொடுத்தாச்சு... இனி ஆக்‌ஷன்தான்! தவெக அரசை தட்டி எழுப்பும் பகுதிநேர ஆசிரியர்கள்!
வாக்குறுதி கொடுத்தாச்சு... இனி ஆக்‌ஷன்தான்! தவெக அரசை தட்டி எழுப்பும் பகுதிநேர ஆசிரியர்கள்!
மாணவர்களுக்கு நிதித் திட்டமிடல் கற்றுக்கொடுப்பது அவசியம் - ஏன் தெரியுமா?
மாணவர்களுக்கு நிதித் திட்டமிடல் கற்றுக்கொடுப்பது அவசியம் - ஏன் தெரியுமா?
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
US Iran War: ‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
Upcoming Turbo Petrol Cars: புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
Maruti S Presso: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ SUV - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ எஸ்யுவி - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
Embed widget