மேலும் அறிய
வயிற்று வலியால் துடிக்கும் அரசுப் பள்ளி மாணவி... மருத்துவ உதவி கேக்கும் சுமதி டீச்சர்
”என் குழந்தைங்களுக்கு ஏதேனும் மருத்துவ உதவி கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்" என வார்த்தைக்கு வார்த்தை என் குழந்தைகள் என்றே பேசினார் சுமதி டீச்சர்.

சுமதி டீச்சர் - சிவதர்ஷினி
Source : whats app
”என்ன பிரச்னைனு இன்னும் கண்டுபிடிக்க முடியல, ஒருவாய் கூட சாப்பிட்டாலும் புள்ள வயிறு வலில துடிச்சு போயிருவா” - என வேதனைகள் வெளிப்படுத்தினார் அரசுப் பள்ளி ஆசிரியை சுமதி.
அரசுப் பள்ளி
கல்வியின் முக்கியத்துவம் ஒவ்வொரு வீடுகளிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கும் நேரம் இது. கல்வி தான் முன்னேற்றத்திற்கான படிக்கட்டு, கல்வியே நம்மை கை பிடித்து கரைசேர்க்கும் என்று நம்பும் பெற்றோர்கள் எப்பாடுபட்டாவது தன் பிள்ளைகளுக்கான கல்வியை வழங்கிவிட வேண்டும் என்று ஓயாது உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் பிள்ளைகளை தனியார் பள்ளிகளிலயே படிக்க வைக்க பெற்றோர் விரும்புகின்றனர். அரசு பள்ளியில் சேர்த்தால் பிள்ளைங்க ஒழுங்கா படிக்க மாட்டாங்களோ, படிப்பு சொல்லித்தர மாட்டாங்களோனு ஒரு பயம் பெற்றோர்களுக்கு இருந்துகிட்டே இருக்கு.
சுமதி டீச்சர்
இதுக்காகவே கடன் வாங்கியாச்சும், புள்ளய தனியார் ஸ்கூல்ல சேக்குறாங்க. இன்னைக்கு இது கொஞ்சம் மாறியிருந்தாலும், அரசு பள்ளிகள் மேல தானாகவே ஒரு பிம்பம் விழுந்துருச்சு. அப்பப்போ செய்திகள்-ல அரசு பள்ளியில் படித்து சாதித்த மாணவர்கள்னு பாக்குறப்போ எழும் நம்பிக்கை பல பெற்றோருக்கும் மாணவருக்கும் பெரிய உந்துசக்தி. அப்படி தான், இப்போ சமீப காலமாக ட்ரெண்டிங்கில் இருக்கும், மதுரை மாவட்டம், மேலூர் தெற்காமூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள், அரசுப்பள்ளிகளின் மீது பெரும் நம்பிக்கையை விதைத்திருக்கிறார்கள். இதெற்கெல்லாம் காரணம் அப்பள்ளியின் ஆசிரியர் சுமதி அவர்கள். அவர்கள் பாடம் பயிலும் விதமே அத்தனை அற்புதம்.
சிவதர்ஷினி believe yourself
சமூக வலைதலைங்கள் அப்பப்போ இது போன்ற நன்மைகளுக்கும் பயன்படுது. அவர்கள் படிப்பு கற்றுக்கொள்ளும் விதம் இது உண்மையில் அரசுப்பள்ளி தான? என நம்மை பிரம்மிக்க வைக்கிறது. "சிவதர்ஷினி believe yourself" ங்கிற குரல் நமக்குள்ள எதோ பெரிய மோட்டிவேஷன கொடுக்கும். இதுகுறித்து ஆசிரியர் சுமதி அவர்களிடம் கேட்டபோது,"நான் வேலை செய்ய ஆரம்பிச்சதுல இருந்து இப்டிதான், என்னுடைய வேலைய சிறப்பா செய்யணும்னு செய்வேன்.
ஒருவாய் கூட சாப்பிட்டாலும் புள்ள வயிறு வலில துடிச்சு போயிருவா
இதுநாள் வரைக்கும் டைம் பார்த்து வேல செஞ்சதே இல்ல, எவ்வளவு நேரம் ஆனாலும் என் வேலைகளை எல்லாம் முடிச்சுட்டு தான் போவேன், அது வரைக்கும் என் குழந்தைகளும் என்னய விட்டுட்டு போக மாட்டாங்க. எனக்கு எல்லாமே என் குழந்தைகள் தான். நான் இன்ஸ்டாகிராம்ல வீடியோ போட ஆரம்பிச்ச காரணமே இந்த குழந்தைகளுக்கு ஏதாச்சும் மருத்துவ உதவிகள் கிடைக்கணும் அப்படிங்கிற நோக்கத்துல தான். சிவதர்ஷினியும், அவர் கூட பிறந்த இரண்டு குழந்தைகளுமே dwarf சைல்ட். அவங்க அப்பா கூலி வேலை பார்க்குறவங்க, அம்மா ஹவுஸ் ஒயிப். சிவதர்ஷினிக்கு தைராய்ட் இருக்குனு சொல்றாங்க, ஆனா அது என்ன பிரச்னைனு இன்னும் கண்டுபிடிக்க முடியல, ஒருவாய் கூட சாப்பிட்டாலும் புள்ள வயிறு வலில துடிச்சு போயிருவா, என்னையும் டாக்டர் கிட்ட அழைச்சுட்டு போக சொல்லி கேட்ருக்கா, ஆனா அதற்கான சூழல் அமையவே இல்ல.
மருத்துவ உதவி கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்
நான் முதல் முதலில் இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கியதே, சிவதர்ஷினியின் அண்ணன் சிவ பாண்டியனுக்காக தான். என் குழந்தைங்களுக்கு ஏதேனும் மருத்துவ உதவி கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் " என வார்த்தைக்கு வார்த்தை என் குழந்தைகள் என்றே பேசினார். பள்ளிகள் தரம் உயர இவரை போன்ற ஆசிரியர்கள் பெரும் தூணாக செயல் படுகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
வேலைவாய்ப்பு




















