Nellai: நெல்லையில் கொடூரம்.. பள்ளி மாணவன் தற்கொலை, உடலோடு குடும்பத்தினர் போராட்டம் - பேருந்துகள் எரிப்பு
Nellai Student Suicide: நெல்லையில் தனியார் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nellai Student Suicide: நெல்லையில் தனியார் பள்ளி மாணவன் மரணத்திற்கு நீதி கோரி, குடும்பத்தினர் சடலத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாணவன் தற்கொலை:
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் அமைந்துள்ள தனியார் பள்ளியை சேர்ந்த மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் திட்டி பெற்றோரை அழைத்து வர சொன்னதன் காரணமாக மாணவன் பூச்சி மருந்து அருந்தியதாகவும், காலை நேர வழிபாட்டின் போது மயங்கி விழுந்து மாணவன் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உயிரிழந்த மாணவனின் சடலத்துடன் குடும்பத்தினர் காவல்நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். அதோடு, மாணவன் பயின்ற பள்ளிக்கு சொந்தமான இரண்டு பேருந்துகளையும் தீயிட்டு கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன?
முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில், பயின்று வந்த ஸ்ரீமதி எனும் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அந்த பள்ளி வளாகமும் சூறையாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.





















