TN weather Reoprt: சென்னையில் கொட்டிய கனமழை, இன்றைய நிலவரம் என்ன? எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை
TN weather Reoprt: சென்னையில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியது.

TN weather Reoprt: தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு, கனமழைக்கான சூழல் நிலவுவதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சென்னையில் கொட்டிய கனமழை:
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கி சுழற்சி நிலவுவதாலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் அடுத்த சில தினங்களுக்கு தமிழ்நாட்டில் பரவலாக மழை பொழிய வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை மையம் எச்சரித்து உள்ளது. அதன்படி, சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் பரவலான மழை பதிவானது. கோடம்பாக்காம், பெரியார்பாதை, சூளைமேடு, நுங்கம்பாக்கம், கோயம்பேடு, அரும்பாக்கம், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் மழை பதிவானது. இதனால் பகலில் சுட்டெரித்த வெயிலின் தாக்கம் குறைந்து, குளிச்ச்சியான சூழல் நிலவுகிறது.
இன்றும் கனமழைக்கு வாய்ப்பா?
தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிபேட்டை, காஞ்சீபுரம், வேலூர், விழுப்புரம், மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான - கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த சில தினங்களுக்கான வானிலை எச்சரிக்கை:
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,
19-07-2025 மற்றும் 20-07-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
21-07-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
22-07-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழக மீனவர்களுக்கான எச்சரிக்கை:
18-07-2025 முதல் 20-07-2025 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
21-07-2025: தமிழக கடலோரப்பகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்" என வானிலை மையம் எச்சரித்துள்ளது.





















