"திராவிட மாப்பிள்ளைக்கு பிறந்தநாள்..." எம்.பி முதல் எம்.எல்.ஏ வரை வரிசை கட்டி வாழ்த்து..
முதல்வர் முக ஸ்டாலினின் மருமகனான சபரீசன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் திமுகவினர் பலரும் அவருக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் மருமகனான சபரீசன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் திமுகவினர் பலரும் அவருக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.
சபரீசன்:
முதல்வர் ஸ்டாலினின் மருமகனான சபரீசன் நேரடியாக அரசியலில் ஈடுப்படாவிட்டாலும் மறைமுகமாக ஈடுபடுவதாக ஒரு தகவல் தேர்தல் சமயத்தில் பரவும், கடந்த ஆண்டு கூட தொழிலதிபரான அதானி சந்தித்து பேசியதாக செய்திகள் வெளிவந்தன, இதனை அப்போதைய பாஜக தலைவராக அண்ணாமலையும் விமர்சனம் செய்து இருந்தார்.
ஆனால் இந்த யூகங்கள் மற்றும் விமர்சனங்கள் எதற்கும் சபரீசன் தரப்பில் இருந்து பதில் எதும் வராமல் அமைதியாகவே கடந்து சென்றுவிடுவர்.
அறிவாலயம் வந்த சபரீசன்:
சில நாட்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இல்லாத நேரத்தில் ஓரணியில் தமிழ்நாடு குறித்து அறிவாலயத்தில் டிஆர்பி ராஜா தலைமையில் நடந்த கூட்டத்தில் சபரீசன் கலந்துக்கொண்டு அங்கிருந்த திமுகவினருடன் அமர்ந்து உணவும் அருந்தி இருந்தார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் காட்சிகள் வெளியாகி இருந்தது.
பிறந்தநாள் வாழ்த்து:
இந்த நிலையில் இன்று பிறந்த நாள் காணும் திமுக இணையவாசிகள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். குறிப்பாக திமுக எம்.பியான தயாநிதி மாறன் உட்பட பலர் அவருக்கு தெரிவித்துள்ளனர்.
தயாநிதி மாறன் தெரிவித்துள்ள வாழ்த்தில் இன்று பிறந்தநாள் காணும் அன்புச் சகோதரர் திரு.வே.சபரீசன் அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள்! என்று தெரிவித்திள்ளார்.
இன்று பிறந்தநாள் காணும் அன்புச் சகோதரர் திரு.வே.சபரீசன் அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள்! pic.twitter.com/z8r324RT9H
— Dayanidhi Maran தயாநிதி மாறன் (@Dayanidhi_Maran) July 17, 2025
மணச்சநல்லூர் எம்.எல்.ஏ:
மணச்சநல்லூர் திமுக எம்.எல்.ஏ எஸ்.கதிரவன் தனது மகனுடன் சபரீசனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது வாழ்த்து பதிவில் இன்று பிறந்தநாள் விழா காணும் மதிப்பிற்குரிய உயர்திரு மாப்பிள்ளை சார் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!! என பதிவிட்டுள்ளார்.
இன்று பிறந்தநாள் விழா காணும் மதிப்பிற்குரிய உயர்திரு மாப்பிள்ளை சார் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!#MKStalin || #UdhayanidhiStalin || #KNNehru || #DMKGovt || #DMK || #tngovt || #mannachanallurskathiravan || #happybirthday || #Sabareesan pic.twitter.com/a7lVPHu8go
— Mannachanallur S.Kathiravan MLA (@ManachanallurSK) July 17, 2025
இன்று பிறந்த நாள் காணும்
— Dr Kanimozhi NVN Somu (@DrKanimozhiSomu) July 17, 2025
கழக தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மாப்பிள்ளை மதிப்பிற்குரிய திரு.சபரீசன் அவர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தேன்..! pic.twitter.com/JhsFHtazW9
இதுமட்டுமில்லாமல் திமுக கட்சியை முக்கிய பிரமுகர்கள் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ உட்பட கட்சியை சேர்ந்த பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கட்சியில் எந்தபதிவியிலும் இல்லாத சபரீசனுக்கு திமுகவினர் இந்த அளவுக்கு வாழ்த்து செய்தியை கூறி வருவது ஆச்சரியத்தை கொடுத்து வருகிறது. இதே போல் கடந்த ஆண்டு கூட திமுகவின் சீனியர் அமைச்சர்களான ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, அர.சக்கரபாணி, பொன்முடி ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து இருந்தனர்
*திராவிட மாப்பிள்ளை 🔥 பிறந்தநாள் வாழ்த்துக்கள் சபரிசன் அண்ணா* ❤️💪🏻#sabareesan #happybirthday #DMK #TrendingNews pic.twitter.com/xCND7tyjrz
— Aero R Praveen Raj (@Aero_PraveenRaj) July 17, 2025
முன்னாள் முதல்வரான கருணாநிதியின் மருமகனான முரசொலி செல்வத்துக்கு கூட இந்த அளவிற்கு திமுகவினர் மத்தியில் செல்வாக்கு இருந்ததில்லை என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலினின் மருமகனான சபரீசனுக்கு திமுகவினர் மத்தியில் பெரிய செல்வாக்கு உள்ளது என்று பலரும் பேசி வருகின்றனர்.





















