இன்னும் 50 நாளில் ரிலீஸ்...ஹைப் பத்தலையே...மதராஸி பட புதிய போஸ்டர் வெளியிட்ட படக்குழு
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி திரைப்படம் வெளியாக இன்னும் 50 நாட்களே இருக்கும் நிலையில் புதிய பொஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது

செப்டம்பர் 5 ரிலீஸாகும் மதராஸி
அமரன் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் மதராஸி. ஶ்ரீ லக்ஷ்மி மூவிஸ் தயாரித்துள்ள இந்த படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்கியுள்ளார். ருக்மினி வசந்த் , வித்யுத் ஜம்வால் , விக்ராந்த் , பிஜூ மேனன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி மதராஸி திரைப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. படம் வெளியாக இன்னும் 50 நாட்களே இருக்கும் படத்தில் படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் முந்தைய படமான அமரன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றிருந்தாலும் மதராஸி படத்திற்கு ரசிகர்களிடம் குறைவான எதிர்பார்ப்பே இருந்து வருகிறது. முருகதாஸ் இயக்கத்தில் சமீபத்தில் இந்தியில் வெளியான சிகந்தர் திரைப்படம் தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து மதராஸி படம் சொதப்பாமல் இருக்க வேண்டும் என எஸ்.கே ரசிகர்கள் வேண்டி வருகிறார்கள்
Loading 💥💥💥#Madharaasi pic.twitter.com/B0JhrL14Yu
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) July 17, 2025





















