மேலும் அறிய

"சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருப்பது நமது கடமை" குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு

தூய்மை இந்தியா இயக்கத்தில் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்று குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கேட்டு கொண்டுள்ளார்.

நமது கலாச்சார, ஆன்மீக உணர்வுகளின் ஒருங்கிணைந்த பகுதியாக தூய்மை உள்ளது என்று குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கூறியுள்ளார்.

குடியரசுத்தலைவர் என்ன பேசினார்?

கடந்த 2024ஆம் ஆண்டுக்கான தூய்மை கணக்கெடுப்பு (ஸ்வச் சர்வேக்ஷன்) விருதுகளை டெல்லியில் இன்று (17.07.2025) அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், நமது நகரங்களில் தூய்மைக்கான  முயற்சிகளை ஊக்குவிப்பதில் இந்த விருதுகள் வெற்றிகரமான நடைமுறையாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு, உலகின் மிகப்பெரிய தூய்மை ஆய்வை, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், மாநில அரசுகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் இணைந்து சுமார் 14 கோடி மக்களின் பங்களிப்புடன் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் மேற்கொண்டதாக குடியரசுத்தலைவர் தெரிவித்தார்.

"பாரம்பரிய வாழ்க்கை முறையிலிருந்து கற்று கொள்ள வேண்டும்"

தெய்வீகத்திற்கு இணையாக தூய்மையை மகாத்மா காந்தி வலியுறுத்தியதாக அவர் குறிப்பிட்டார். இன்றைய காலகட்டத்தில் நமது சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருப்பது நமது கடமை என்று அவர் தெரிவித்தார். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிப் (பிளாஸ்டிக்) பொருட்களுக்கு 2022ஆம் ஆண்டு மத்திய அரசு தடை விதித்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

அதே ஆண்டில், நெகிழிப் பொருட்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டதை அவர் குறிப்பிட்டார். உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் இந்த நெறிமுறைகைளை பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

கழிவுகளைக் குறைத்து மறு பயன்பாட்டையும், மறு சுழற்சியையும், அதிகரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதுவே, சுழற்சிப் பொருளாதாரத்தில் அடிப்படைத் தத்துவம் என்று அவர் கூறினார். பாரம்பரிய வாழ்க்கை முறையிலிருந்து பல்வேறு விஷயங்களைக் கற்றுக் கொண்டு நவீன மறுசுழற்சி நடைமுறைகளை வலுப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

தூய்மை இந்தியா இயக்கத்தின் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். கடந்த 2047ஆம் ஆண்டுக்குள், உலகின் மிகவும் தூய்மையான நாடுகளுள் ஒன்றாக இந்தியா உருவெடுக்க வேண்டும் என்று தீர்மானத்துடன் அனைவரும் செயல்படவேண்டும் என்று குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு அறிவுறுத்தினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
MK STALIN: மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்.! திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 முக்கிய தீர்மானங்கள்
மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்.! திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 முக்கிய தீர்மானங்கள்
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
MK STALIN: மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்.! திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 முக்கிய தீர்மானங்கள்
மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்.! திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 முக்கிய தீர்மானங்கள்
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
Cyclone Ditwah Flight cancel: டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
Embed widget