நடிகை பாவ்யாவை கலாய்த்த ராஜூ.. முதல் படத்திலேயே 2 ஹீரோயின்.. பன் பட்டர் ஜாம் படக்குழு கலகலப்பான நேர்காணல்
பன் பட்டர் ஜாம் படம் புரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் ராஜூ கலகலப்பாக பேசியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

சின்னத்திரையில் கலக்கி வந்த ராஜூ ஜெயமோகன் பன் பட்டர் ஜாம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகியுள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அறிமுக இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ளார். கல்லூரி இளைஞனாக வரும் ராஜூ துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படம் வரும் 18ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், பன் பட்டர் ஜாம் படக்குழுவினர் கலகலப்பான பேட்டி அளித்திருக்கின்றனர். அதில் நடந்த சுவாரஸ்யங்களை இங்கு காணலாம்.
முதல் படத்திலேயே 2 ஹீரோயின்
பன் பட்டர் ஜாம் படம் தொடர்பாக நடிகர் ராஜூ, இயக்குநர் ராகவ் மிர்தாத், பாவ்யா திரிகா ஆகியோர் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தனர். அப்போது ராஜூ தனது சிறு வயதில் பிடித்த உணவுகளை ஜாலியாக தெரிவித்தார். நீங்கள் நடித்த முதல் படத்திலேயே 2 ஹீரோயினுடன் நடித்த அனுபவம் குறித்து தொகுப்பாளர் கேட்டார். அதற்கு பதிலளித்த ராஜூ, ஏன் மா ராஜூவுக்கு 2 ஹீரோயினா. ஏன் இருக்கக் கூடாதா? நீங்க நினைக்குற மாதிரி அப்படி எல்லாம் கிடையாது. 2 ஹீரோயின் இல்லை. படம் பார்க்கும்போது புரியும். டிரைலர் சுவாரஸ்யத்திற்காக காட்டியிருக்கோம். மக்களுக்கு பிடிக்கும் என ராஜூ தெரிவித்தார்.
இனிமையான குரலில் கெட்டவார்த்தை
பின்னர் நிகழ்ச்சியின் போது தொகுப்பாளர் நடிகர் ராஜூவுக்கு ஒரு டாஸ்க் கொடுத்தார். கை சொடக்கினால் நடிகை பாவ்யா பத்தி பாசிட்டிவாக சொல்ல வேண்டும் அடுத்த சொடக்கின் போது நெகட்டிவாக பேசனும் என தெரிவித்தார். அதற்கு தயாரான ராஜூ, பாவ்யாவை பங்கமாக கலாய்த்து பேசினார். அதில், படப்பிடிப்பு 8 மணிக்கு ஷார்ப் ஆ இருப்பாங்க, யார் படத்திற்கு முன்னுரிமை கொடுக்கிறாங்கனு இருக்குதுல. பிரபுதேவா சார் படத்திற்கு தான் போவாங்க. பாவ்யா தங்கமான பொண்ணு, பஞ்சாபியா இருந்தாலும் தமிழ் அழகா பேசுவாங்க என தெரிவித்தார். அடுத்த சொடக்கின் போது, சில வார்த்தைகளை காது கொடுத்து கேட்க முடியாது. அந்த இனிமையான குரலில் கெட்ட வார்த்தைகளை கேட்கும்போது அடேங்கப்பா காதில் தேன் வந்து பாயும் என கலாய்த்து பேசினார்.
அடியாள் மாதிரி வருவாங்க
அதாவது பாவ்யாவின் குடும்பத்தை பத்தி சொல்லி ஆகணும். பயங்கர சப்போர்ட்டிவா இருக்காங்க. ஆனால், எல்லா இடத்திலேயும் அடியாள் மாதிரி வருவாங்க. எங்கே பார்த்தாலும் அவங்கதான், அப்படியே துறுதுறுன்னு இருப்பாங்க என்று ராஜூ சொல்லும் போது நடிகை பாவ்யா ஆமா ஆமா என்பது விழுந்து விழுந்து சிரித்தார். அதே மாதிரி அதிக நேரம் பாேன் நோண்டும் பழக்கம் பாவ்யாவிற்கு கிடையாது என ராஜூ தெரிவித்தார்.
ஜூலியட் என்ற பொண்ணுடன் காதல்
சினிமாவில் நடிக்க வந்தது குறித்து பேசிய பாவ்யா, "நான் ரொம்ப ஆவரேஜ் ஸ்டூடண்ஸ். எனக்கு படிப்பு அவ்வளவா வராது. ஜூலியட் சீசரில் ஒரு கதாப்பாத்திரமாக டிராமாவில் நடித்தேன். அது என்னால் மறக்க முடியாது" என்றார். பிறகு பேசிய ராஜூ, நான் பத்தாவது படிக்கும் பாது ஜூலியட் என்ற பெண்ணை காதலித்தேன். அது மட்டும் தான் தெரியும். எத்தனை பேரை காதலித்தேன் என்று கணக்கு வைக்கவில்லை. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு மேடம் இப்போ அதை சொன்னேனா அப்புறம் காதலிக்க ஆள் இருக்கமாட்டாங்க என ராஜூ கலகலப்பாக சொல்லி முடித்தார்.





















