காலில் தசை முறிவு..சிவராத்திரிக்கு விரதம்..மோனிகா பாடலின் போது பூஜா ஹெக்டேக்கு இத்தனை கஷ்டமா
கூலி படத்தின் மோனிகா பாடலின் போது தனது காலில் தசை முறிவு ஏற்பட்டதாக நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

வைரலாகும் கூலி மோனிகா பாடல்
லோகேஷ் கனகராஜ் இயக்கி ரஜினி நடித்துள்ள கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. உபேந்திரா , நாகர்ஜூனா , சத்யராஜ் , செளபி சாஹிர் , ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. கூலி படத்தின் சிகிட்டு பாடலைத் தொடர்ந்து அண்மையில் இப்படத்தின் இரண்டாம் பாடலான மோனிகா பாடல் வெளியானது. வழக்கம் போல அனிருத் இசையமைத்துள்ள இந்த பாடல் பட்டிதொட்டி எல்லாம் வைரலாகியுள்ளது. பிரபல நடிகை மோனிகா பெல்லூச்சியின் பெயரை உருவாகியுள்ள இந்த பாடலில் பூஜா ஹெக்டே சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். சிவப்பு நிற ஆடையில் பூஜா ஹெக்டேவின் நடனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. சமூக வலைதலங்களில் ரசிகர்கள் இந்த பாடலை வைத்து ரீல்ஸ்களை வெளியிட்டும் வருகிறார்கள்.
கால் முறிவோடு நடனமாடிய பூஜா ஹெக்டே
மோனிகா பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனதற்கு ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராமில் நன்றி தெரிவித்துள்ளார் பூஜா ஹெக்டே. இந்த பதிவுடன் மோனிகா பாடலின் பி.டி.எஸ் வீடியோ மற்றும் புகைபடங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
" மோனிகா பாடலுக்கு நீங்கள் கொடுத்த அன்பிற்கு நன்றி .மோனிகா எனது கரியரில் மிகவும் கடின உழைப்பை கோரிய பாடல்களில் ஒன்றாகும். கடுமையான ,வெயில் எரிச்சல் , அணல் , தூசுக்கு இடையிலும் தசை முறிவுக்குப் பின் நான் ஆடிய பாடல் இது. இவை அனைத்திற்கும் பிறகும், அது கவர்ச்சியாகவும் எளிதாகவும் இருப்பதை உறுதிசெய்வதுதான் முக்கியம். மோனிகாவுக்கு எனது அனைத்தையும் கொடுத்தேன், இது திரையரங்குகளில் பார்ப்பதற்கு ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன். இந்தப் பணியில் என்னுடன் நின்று, மகாசிவராத்திரி நாளில், குறிப்பாக நான் உண்ணாவிரதம் இருந்தபோது, எனக்கு ஆற்றலை அளித்த நடனக் கலைஞர்களுக்கு சிறப்பு பாராட்டுகள். நீங்கள் அற்புதமாக நடனமாடினீர்கள்.
View this post on Instagram





















