Shreyas Iyer K Sticker: ஸ்ரேயாஸ் அணிந்திருக்கும் விலை உயர்ந்த கேட்ஜெட்...என்னது அதோட விலை இவ்வளவா?
கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை, ஃபாலோ செய்து வந்திருந்தால் நீங்கள் ஒன்றை கவனித்திருப்பீர்கள். அவரின் வலது ட்ரைசெப்பில் ஒரு கருப்பு கலர் கே ஸ்டிக்கர் அணிந்திருப்பதை கவனித்து இருப்பீர்கள்.
கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை, ஃபால்லோ செய்து வந்திருந்தால் நீங்கள் ஒன்றை கவனித்திருப்பீர்கள். அவரின் வலது ட்ரைசெப்பில் ஒரு கருப்பு கலர் கே ஸ்டிக்கர் அணிந்திருப்பதை கவனித்து இருப்பீர்கள்.
இதையும் படிக்க: ரூ. 2 லட்சம் கடனுக்கு 10 லட்சம் கேட்டு மிரட்டல்... கந்துவட்டி கொடுமையால் ஃபாஸ்ட்ஃபுட் கடைக்காரர் தற்கொலை!
கொல்கத்தா அணியில் அவர் விளையாடிவருவதால் அதற்கும் அணிக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா என கேள்வி எழுந்தது. ஆனால், எந்த தொடர்பும் இல்லை. ஏதேனும் சமூக பிரச்னைக்காக அவர் அணிந்திருக்கிறாரா என சந்தேகம் எழுந்தது. ஆனால், அதுவும் இல்லை.
பின்னர்தான், அது பெங்களூரு ஸ்டார்ட் அப் நிறுவனமான அல்ட்ரா ஹுமன் தயாரித்த விலை உயர்ந்த கேட்ஜெட் என தெரியவந்தது. சமீபத்தில்தான், அந்த நிறுவனத்துடன் ஸ்ரேயாஸ் கைகோர்த்துள்ளார். அந்த கேட்ஜெட்டின் பெயர் அல்ட்ரா ஹுமன் M1.இரத்த குளுக்கோஸ் அளவை கண்காணிப்பதற்காக அது பயன்படுத்தப்படுகிறது.
இதையும் படிக்க: ஆபீஸ் பாய்; மேனேஜர்; அசிஸ்டண்ட் டைரக்டர்.... - இயக்குநர் சேரன் சினிமாவுக்கு வந்த கதை...!
ஐபோன் செயலியுடன் இணைப்பதன் மூலம் நொடிக்கு நொடிக்கு உங்களுடைய ரத்த குளுக்கோஸ் அளவை தெரிந்து கொள்ளலாம். இன்ஸ்டாகிராம், ட்விட்டர், லிங்டின் போன்றவற்றில் பிரபலங்களின் வைத்து அந்நிறுவனம் கேட்ஜெட்டை விளம்பரப்படுத்தவுள்ளது.
ரத்த குளுக்கோஸ் அளவை டிராக் செய்வதன் மூலம் உடலை எப்படி ஃபிட்டாக வைத்து கொள்வது என்பதை தெரிந்து கொள்ளலாம். உடல் ஆரோக்கியம் குறித்த தெரியாத பல தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிக்க: IND vs SA, 1st T20 : எனக்கு இது முன்னவே தெரியும்; அதுதான் ட்விட்ஸ்ட்! - இந்தியாவுடனான வெற்றி குறித்து வான்டர் டுசன்
எளிதாக சொல்ல வேண்டுமானால், பயோ சென்சார் பொருத்தப்பட்ட கே ஸ்டிக்கரை ட்ரைசெப்பில் கட்டி கொள்ள வேண்டும். பயோ சென்சாரின் மூலம் ரத்த குளுக்கோஸ் அளவை கணக்கிட்டு அது செயலிக்கு தகவல்களை அனுப்பும். இதில் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், நிமிடத்திற்கு நிமிடம் குளுக்கோஸ் அளவு மாறி கொண்டே இருக்கும்.
இதன் மூலம், உங்கள் உடலில் எவ்வளவு ஆற்றல் இருக்கிறது என்பதை நொடிக்கு நொடி தெரிந்து கொள்ளலாம். எப்போது தூங்க வேண்டும், சாப்பிட வேண்டும், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்