Ind vs Eng Lords Test: ”பவுன்ஸ், திடீரென குத்தி சுழன்ற பந்து” - லார்ட்ஸில் உடைந்த இதயங்கள், வீடியோ வைரல்
Ind vs Eng Lords Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் கடைசி விக்கெட்டான, சிராஜ் ஆட்டமிழந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Ind vs Eng Lords Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் கடைசி விக்கெட்டான, சிராஜ் ஆட்டமிழந்ததும் ஒட்டுமொத்த ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
உடைந்து போன இந்தியர்கள்:
இங்கிலாந்து அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்று என நம்பிக் கொண்டிருத்த கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்கள் ஒரு சொடியில் சுக்கு நூறாகின. எதிர்பாராத விதமாக சிராஜ் ஆட்டமிழந்தது, ஜடேஜாவின் தனிமனித போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்ததோடு, இங்கிலாந்து அணியை தொடரில் 2-1 என முன்னிலை பெறவும் செய்துள்ளது.
அந்த ஒரு நொடி:
183 ரன்கள் என்ற எளிய நோக்கி இந்திய அணி களமிறங்கினாலும், ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருந்ததால் ரன் சேர்ப்பது எளிதாக அமையவில்லை. இதனால் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், கடைசி விக்கெட்டிற்கு 46 ரன்கள் தேவை என்ற சூழலில் முகமது சிராஜ் களமிறங்கினார். கடந்த சில போட்டிகளில் இந்திய அணியின் டெயில் எண்டர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும், லார்ட்ஸ் போட்டியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த வகையில் சிராஜும் ஆட்டமிழப்பதற்கு முன்பாக 29 பந்துகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு, இந்திய அணிக்கு வெற்றிக்கான வாய்ப்பை நீட்டித்தார். ஆனால், எதிர்பாராத விதமாக 30வது பந்தில் ஆட்டமிழந்தது, லார்ட்ஸ் மைதானத்தில் மீண்டும் வெற்றி பெறுவோம் என காத்திருந்த இந்திய ரசிகர்களை கண்கலங்க செய்தது.
Most unlucky 😔 moment of the cricket.
— RED BULL (@RedBullXcricket) July 14, 2025
Mohmmad siraj unlucky out.#INDvsENG #INDvsENGTest #RAVINDRAJADEJA #siraj #cricket pic.twitter.com/NxjBjL3IOA
வைரல் வீடியோ:
சோயப் பஷீர் வீசிய பந்து சிராஜ் எதிர்பார்த்ததை காட்டிலும், அதிக அளவும் பவுன்ஸ் ஆனது. ஆனாலும், அதை சமாளித்து தனது முழு பேட்டிலும் படும்படி பந்தை தடுத்தார். அதேநேரம், பேட்டில் பட்ட பந்து தரையில் குத்தி சுழன்று சிராஜிற்கு பின்புறமாக சென்று எதிர்பாராத விதமாக, லெக் ஸ்டம்பில் பட பெயில் கீழே விழுந்தது. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த இதை அத்தனையையும் அவரால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. இதன் மூலம் வெற்றி உறுதியானதுமே இங்கிலாந்து வீரர்கள் உற்சாகத்துடன் கத்தி மகிழ்ந்தனர். ஒட்டுமொத்த போட்டியை தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த சிராஜின் விக்கெட் வீழ்ந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனிநபராக போராடிய ஜடேஜா:
போட்டியில் ஏழாவது வீரராக களமிறங்கிய ஜடேஜா, மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தாலும், நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அவர் இருக்கும் வரை, இந்திய அணிக்கான வெற்றி வாய்ப்பு பறிபோகாது என ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். அதனை உறுதியாக்கும்படியே நிலைத்து நின்று ஆடி அரைசதமும் விளாசினார். ஆனால், மறுமுனையில் அவருக்கு ஆதரவளிக்க யாரும் இன்றி 170 ரன்களுக்கு இந்திய அணி ஆல்-அவுட்டானது. ஜடேஜா இறுதி வரை ஆட்டமிழக்காமல் 61 ரன்களை சேர்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி, வரும் 23ம் தேதி ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.




















