MetturDam: மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு: டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு! ஒகேனக்கல்லில் மீண்டும் உற்சாகம்!
மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 20,500 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து நேற்று வினாடிக்கு 19,760 கனஅடியாக குறைந்தது.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 20,000 கனஅடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்குமேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
8 நாளுக்கு பின் நீர்மட்டம் சரிவு
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் வரத்து காரணமாக கடந்த 5ஆம் தேதி நடப்பு ஆண்டி 2-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது. தற்போது மழை தணிந்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டது. அதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. சுபான்ஷு சுக்லா பூமிக்குத் திரும்பும் பயணம் தொடங்கியது.
நேற்று முன்தினம் இரவு மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 20,500 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து நேற்று வினாடிக்கு 19,760 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 20,000 கனஅடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்குமேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 119.85 அடியாகவும் நீர் இருப்பு 93. 23 டி.எம்.சி.யாக உள்ளது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 16,000 கன அடியாக குறைந்தது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று வினாடிக்கு 18,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 16,000 கன அடியாக குறைந்துள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகம் ஆற்றில் *குளிக்க மட்டும்* 20-வது நாளாக தடை தொடர்கிறது.
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் கர்நாடக அணைகளில் காவிரியில் உபரிநீர் திறக்கப்பட்டதால் கடந்த 25 நாட்களாக பரிசல் இயக்குவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நீர்வரத்து குறைந்துள்ளதால் மீண்டும் பரிசல் பயணம் தொடங்கியது.
கர்நாடகா மாநிலத்தில் கடந்த 25 நாட்களாக உபநீர் காவிரியில் திறந்து விடப்பட்டது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வினாடிக்கு 88 ஆயிரம் கன அடி வரை நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு நேரிட்டதால் மாவட்ட நிர்வாகம் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருத்தில் கொண்டு மெயின் அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிக்கவும் பரிசல் சவாரி மேற்கொள்ளவும் 18 நாட்களாக தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து, நேற்று வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி மட்டுமே நீர் வரத்து இருந்தது. இதனைத்தொடர்ந்து ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. எனவே, மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்க மட்டும் 18 நாட்கள் கழித்து அனுமதி வழங்கியது. மாவட்ட ஆட்சியர் சதீஷ், நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான மணி ஆகியோர் ஒகேனக்கல்லில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் மலர் தூவி படகு சவாரியை மீண்டும் தொடங்கி வைத்தனர். பின்னர் அங்கிருந்த பரிசல் ஓட்டிகள், பொதுமக்கள், மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.





















