மேலும் அறிய

ரூ. 2 லட்சம் கடனுக்கு 10 லட்சம் கேட்டு மிரட்டல்... கந்துவட்டி கொடுமையால் ஃபாஸ்ட்ஃபுட் கடைக்காரர் தற்கொலை!

கந்துவட்டிக் கொடுமையால் கொளத்தூரைச் சேர்ந்த ஃபாஸ்ட்ஃபுட் கடைக்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, கொளத்தூர், லட்சுமி நகர் 8ஆவது தெருவைச் சேர்ந்தவர் சுதாகர் ( வயது 44) சென்னை, அண்ணா சாலையில் ஃபாஸ்ட் ஃபுட் உணவுக் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவர் தன் மனைவி மகேஸ்வரி மற்றும் இரு மகன்களுடன் வசித்து வந்துள்ளார்.

தூக்கிட்டுத் தற்கொலை

இந்நிலையில், நேற்று முன் தினம் மாலை 3 மணிக்கு தனது வீட்டில் படுக்கை அறைக்கு சுதாகர், நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

தொடர்ந்து உடனடியாக இதுகுறித்து ராஜ மங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள், சுதாகரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டுக் கடன், கந்துவட்டி தொல்லை

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், சுதாகர் கந்து வட்டி செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

சுதாகர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ராஜன் என்பவரிடம் வீடு ஒன்றை 45 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் வாங்கியுள்ளார். சுதாகர் இந்த வீட்டுக்கு 20 லட்ச ரூபாய் முன்பணம் கொடுத்த நிலையில், மீதமுள்ள 25 லட்சத்தை அவர் தர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து சுதாகரை தொடர்பு கொண்ட ராஜன், "வீட்டை நானே எடுத்துக் கொள்கிறேன். உனது பணத்தை வாங்கிக்கொள்," என்று கூறியுள்ளார். இதற்கு சுதாகர் மறுப்பு தெரிவித்ததோடு சில மாதங்களில் பணத்தைக் கொடுத்துவிடுவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் இதுகுறித்து சுதாகருக்கும் ராஜனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் ராஜனுக்கு கொடுப்பதற்காக சுதாகர் கொளத்தூர் வெற்றி நகரை சேர்ந்த மைதிலி (54) என்பவரிடம் இரண்டு லட்ச ரூபாய் கடன் வாங்கி உள்ளார். அதற்காக தன் கையொப்பமிட்ட காசோலையை மைதிலியிடம் சுதாகர் கொடுத்துள்ளார்.

இதனிடையே மைதிலி தான் கொடுத்த பணத்தை அடிக்கடி கேட்டு சுதாகரை தொந்தரவு செய்துள்ளார். மேலும், சுதாகர் கொடுத்த செக்கை 10 லட்ச ரூபாயாக பூர்த்தி செய்து வங்கியில் செலுத்தி செக் பவுன்ஸ் செய்துள்ளார்.

அதன்பிறகு சுதாகரிடம், 10 லட்சம் தருமாறு கூறி தொந்தரவு செய்தும் வந்துள்ளார். இந்நிலையில், ராஜன், மைதிலி இருவரின் தொல்லையால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த சுதாகர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

மனைவி புகார்

இதுதொடர்பாக சுதாகரின் மனைவி மகேஸ்வரி ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், அவரது புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மைதிலியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் சுதாகரின் வீடு சம்பந்தமான வழக்கு செங்குன்றம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளதால் அந்த வழக்கை செங்குன்றம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

" என் வாழ்க்கை முடிஞ்சு போச்சு " – போட்டோ அனுப்பி மிரட்டிய இன்ஸ்டா காதலன்
TN Weather News: இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? -தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் மின்தடை !! ஆகஸ்ட் - 1 ம் தேதி 5 மணி நேர மின்தடை !! எங்கெங்கு தெரியுமா ?
சென்னையில் மின்தடை !! ஆகஸ்ட் - 1 ம் தேதி 5 மணி நேர மின்தடை !! எங்கெங்கு தெரியுமா ?
" திமுக செஞ்ச துரோகத்தால தான் ஆட்சியே போச்சு " - எடப்பாடியை கழட்டி விட்ட பூவை ஜெகன் மூர்த்தி

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்... பட்ஜெட் விலையில் Quantum Energy Plasma இ ஸ்கூட்டர்! எவ்ளோ?
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்... பட்ஜெட் விலையில் Quantum Energy Plasma இ ஸ்கூட்டர்! எவ்ளோ?
Mekdatu: கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
Aadi Perukku Registration : ஆடிப்பெருக்கில் பத்திர பதிவு செய்ய திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு பதிவுத்துறை அசத்தல் அறிவிப்பு
ஆடிப்பெருக்கில் பத்திர பதிவு செய்ய திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு பதிவுத்துறை அசத்தல் அறிவிப்பு
Gold and silver rate today : தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Nexon Rival: நெக்ஸானுக்கு போட்டியாக 25KM மைலேஜில் வரும் புது எஸ்யுவி - மினிமம் பட்ஜெட், மேக்ஸிமம் அம்சங்கள்
நெக்ஸானுக்கு போட்டியாக 25KM மைலேஜில் வரும் புது எஸ்யுவி - மினிமம் பட்ஜெட், மேக்ஸிமம் அம்சங்கள்
TN Weather News: இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? -தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Embed widget