எனக்கும் விஜய் சேதுபதிக்கும் சண்டை.. இந்த மாதிரி படங்களை எடுப்பது கடினம்.. பாண்டிராஜ் ஓபன் டாக்
இன்றைய சூழலில் குடும்ப படங்களை எடுப்பது மிகவும் கடினம் என இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்தார்.

பசங்க படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் பாண்டிராஜ். இதைத்தாெடர்ந்து சிவகார்த்திகேயன், சூர்யா, கார்த்தி ஆகிய முன்னணி நடிகர்களை வைத்து குடும்பங்கள் கொண்டாடும் படங்களை இயக்கி மக்களின் இதயத்தில் இடம்பிடித்துள்ளார். மேலும், மண் மனம் மாறாமால் சூழலுக்கேற்ற வகையில் கதையில் சில திருப்பங்களோடு படங்களை இயக்கி ரசிக்க வைத்துள்ளார் பாண்டிராஜ். தற்போது இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள தலைவன், தலைவி படம் குறித்து சுவாரஸ்யமான பதில்களை அளித்துள்ளார்.
விஜய் சேதுபதிக்கும் எனக்கும் சண்டை
விஜய் சேதுபதி, நித்யா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள தலைவன் தலைவி படத்தின் இசை வெளியீட்டு விழா 2 நாட்களுக்கு முன்பு நடந்தது. அதன்பின்னர் படக்குழுவினருடன் விஜய் சேதுபதி, இயக்குநர் பாண்டிராஜூவும் இணைந்து பேட்டி அளித்தனர். அப்போது நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது, எனக்கும் பாண்டிராஜூவுக்கும் ஒருமுறை பயங்கரமான சண்டை வந்தது. இதனால், இவருடன் இனிமேல் பேசக்கூடாது. அவர் படங்களிலேயே நடிக்க கூடாது என்று முடிவெடுத்தேன். இயக்குநர் மிஷ்கின் சார் பிறந்தநாள் விழாவில் பாண்டிராஜை பார்க்கவே கூடாது என நினைத்திருந்தேன். ஆனால், அன்று தான் இருவரும் பேசி நட்பானோம் என விஜய் சேதுபதி தெரிவித்தார்.
குடும்ப படம் எடுப்பது கடினம்
நானும் விஜய் சேதுபதியை பார்க்கக் கூடாது என நினைத்தேன். பேசிவிட்டேன். பிறகு அவரிடம் தலைவன் தலைவி படம் குறித்த கதையே கூறினேன். அவருக்கு பிடித்து விட்டது. அப்படித்தான் இந்தப்படம் உருவானது. ரெண்டு பேருக்கும் சண்டை நடந்தது பற்றி கூற தயக்கம் இல்லை. சொல்ல வேண்டும் என முடிவெடுத்து தான் சொன்னோம் என பாண்டிராஜ் தெரிவித்தார். பிறகு பேசிய அவர், இன்றைய சூழலில் குடும்ப படம் எடுப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. குடும்ப படம் என்றாலே சீரியல், கிரிஞ் என்று சொல்கிறார்கள். கொஞ்சம் சென்டிமெண்ட் இருந்துவிட்டால் அது சீரியலாக மாறிவிடு என்பது உண்மைதான் என இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்தார்.
விவாகரத்து நடக்காது
ஆனால் தலைவன் தலைவி திரைப்படம் கணவன் மனைவிக்கும் இடையே உள்ள சிக்கல்களை உணர்வுப்பூர்வமானதாக இருக்கும். இந்த படத்தை பார்த்த பிறகு விவாகரத்து பெறும் தம்பதிகள் சற்று யோசிப்பார்கள். தலைவன் தலைவி படத்தை மக்கள் ரசித்தால் நிச்சயம் மற்ற ஹீரோக்களும் இப்படி ஒரு படத்தை எடுங்கள் என்று எல்லோரும் கூறுவார்கள் என பாண்டிராஜ் தெரிவித்தார்.





















