மேலும் அறிய

Russia Vs Trump: “ஒழுங்கா டீலுக்கு ஒத்துக்கோ, இல்லைன்னா...“'; ட்ரம்ப் விதித்த கெடு - பணியுமா ரஷ்யா.?

உக்ரைன் உடனான போரை நிறுத்த ரஷ்யா மறுத்து வரும் நிலையில், கடைசியாக ரஷ்யாவிற்கு ஒரு எச்சரிக்கையை ட்ரம்ப் விடுத்துள்ளார். அது என்ன தெரியுமா.?

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்து வரும் நிலையில், போரை நிறுத்த எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்துள்ளன. குறிப்பாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்த போரை நிறுத்த கடும் முயற்சிகளை எடுத்து வந்தார். ஆனால் எதற்குமே பணியாத புதினுக்கு, தற்பாது ஒரு கெடுவை விதித்துள்ளார் ட்ரம்ப். அது என்ன தெரியுமா.?

“50 நாட்களில் ஒப்பந்தம்.. இல்லையென்றால் 100% வரி“

திங்கட் கிழமை ரஷ்யா குறித்து முக்கியமான அறிவிப்பை வெளியிடுவதாக ட்ரம்ப் ஏற்கனவே கூறியிருந்தார். அதன்படி நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ரஷ்யாவிற்கான கெடுவை அறிவித்தார். அதாவது, உக்ரைன் உடனான பிரச்னையை 50 நாட்களில் தீர்க்காவிட்டால், ரஷ்யாவிற்கு 100 சதவீத வரிகள் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

நேற்று, வெள்ளை மாளிகையில், நேட்டோ தலைவர் மார்க் ருத்தே உடனான சந்திப்பிற்குப் பின் பேசிய அவர், ரஷ்யாவின் செயல்களால் மிகவும் மகிழ்ச்சியற்ற மனநிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், 50 நாட்களில் ரஷ்யா எந்த ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளவில்லை என்றால், அந்நாட்டிற்கான வரிகள் 100 சதவீதம் விதிக்கப்படுவதுடன், அந்நாட்டுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கும் இரண்டாம் கட்ட வரிகள் விதிக்கப்பட உள்ளதாக எச்சரித்துள்ளார்.

ஏற்கனவே மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளால் அவதிப்பட்டுவரும் ரஷ்யாவிற்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் வகையில் ட்ரம்ப் இந்த அறவிப்பை வெளியிடுள்ளார்.

‘நேட்டோ‘வுடன் ஆயுத வர்த்தக ஒப்பந்தம்

இதனிடையே, நேட்டோ கூட்டுப்படைகள், அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ள ட்ரம்ப், அப்படி வாங்கப்படும் பேட்ரியாட் ஏவுகணை தடுப்பு அமைப்புகளை, அந்நாடுகள் உக்ரைனுக்கு கொடுத்து உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.

பில்லியன் கணக்கான மதிப்பில் இந்த ஒப்பந்தங்கள் போடப்படுவதாகவும், அமெரிக்காவிடமிருந்து வாங்கும் ஆயுதங்களை, ரஷ்யாவுடன் போராடிவரும் உக்ரைனுக்கு விரைவிலேயே வழங்க உள்ளதாகவும் ட்ரம்ப் ரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், உக்ரைன் ஏராளமான ஆயுதங்களை பெறும் என்று நேட்டோ தலைவர் மார்க் ருத்தே கூறியுள்ளார்.

புதின் மீது மிகுந்த அதிருப்தியில் உள்ள ட்ரம்ப்

முன்னதாக, நேற்று முன்தினம் புதின் குறித்து பேசிய ட்ரம்ப், அவர் உண்மையாகவே ஏராளமான மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்தார். அவர் நன்றாகவே பேசிவிட்டு, மாலையில் அனைவர் மீதும் குண்டுகளை வீசுகிறார் என விமர்சித்திருந்தார்.

கடந்த ஜனவரி மாதத்தில், ரஷ்ய அதிபர் புதினுடன் இணைந்து பணியாற்றி, போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என நம்பிக்கை தெரிவித்த ட்ரம்ப், ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை அதிகரிப்பதையும் நிறுத்தி வைத்திருந்தார். ஆனால், பல மாதங்களாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியும், ரஷ்யா எதற்குமே ஒத்துவரவில்லை. இதனால், சமீப காலமாக, புதின் மீது பெரும் அதிருப்தியில் உள்ளார் ட்ரம்ப்.

ஏற்கனவே, அதிபர் தேர்தலின்போதே, பதவியேற்ற 24 மணி நேரத்தில் ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துவதாக ட்ரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார். அதற்கு புதின் ஒரு தடையாக இருப்பதால், அவர் மீது எரிச்சலடைந்துள்ள ட்ரம்ப், தற்போது அவருக்கு கெடு விதித்துள்ளார். இதற்கு புதின் பணிவாரா.? பொறுத்திருந்து பார்க்கலாம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget