Ind vs Eng Test; வாள் தூக்கி நின்ற ஜடேஜா! போராடி வீழ்ந்த இந்தியா... லார்ட்ஸ்சில் இங்கிலாந்து த்ரில் வெற்றி
இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இறுதிவரை போராடிய ஜடேஜா 61 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்

இங்கிலாந்து அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது.
லார்ட்ஸ் டெஸ்ட்:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து அணி ஜோ ரூட்டின் சதத்தின் உதவியுடன் 387 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸ்சில் ஆட்டமிழந்தது.
அடுத்ததாக முதல் இன்னிங்ஸ்சை தொடங்கிய இந்திய அணி கே.எல் ராகுலின் சதம், பண்ட் மற்றும் ஜடேஜாவின் அரைசதத்துடன் இந்திய அணியும் 387 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இலக்கு 193:
இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸ்சில் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 193 ரன்கள் என்கிற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 59 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது,
ஆர்ச்சர்-ஸ்டோக்ஸ் அபாரம்:
இன்றைய கடைசி மற்றும் 5 ஆம் நாள் ஆட்டத்தை கே.எல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் தொடங்கினர், ஆனால் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பண்ட் 9 ரன்களுக்கும், கே,எல் ராகுல் 39 ரன்களுக்கு, வாஷிங்டன் சுந்தர் டக் அவுட்டாகி வெளியேற இந்திய அணி 82 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் இங்கிலாந்து அணி எளிதில் வெற்றிப்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
போராடிய ஜடேஜா:
ரவீந்திர ஜடேஜா மற்றும் நிதிஷ் ரெட்டி இருவரும் வெற்றிக்காக போராடினர், உணவு இடைவேளையின் கடைசி ஓவரில் வோக்ஸ் பந்துவீச்சில் அவுட்டானர். அப்போது இந்திய அணி ஸ்கோர் 112/8 ஆக இருந்தது.
பின்னர் பும்ரா ரவீந்திரா ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றி பெற போராடி வந்தனர், 9வது விக்கெட்டுக்கு 21 ஓவருக்கு மேல் தாக்குப்பிடித்த இந்த ஜோடியை இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பிரித்தார் 53 பந்துகளை சந்தித்த பும்ரா 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
கடைசி விக்கெட்டுக்காக களமிறங்கினார் முகமது சிராஜ் இவரும் ஜடேஜாவுக்கு நல்ல ஒத்துழைப்பு தந்து வெற்றிக்காக போராடினார். இதற்கிடையில் ஜடேஜா இந்த தொடரில் தனது நான்காவது அரைசதத்தை கடந்து அசத்தி தேனீர் இடைவேளையையும் தாண்டி இந்திய அணி விளையாடியது.
AN ICONIC FIFTY FOR JADEJA IN THE FOURTH INNINGS...!!!
— Johns. (@CricCrazyJohns) July 14, 2025
- The Greatest all rounder in Modern Era. 🐐 pic.twitter.com/5TxLrkomVq
இங்கிலாந்து த்ரில் வெற்றி:
தேனீர் இடைவேளைக்கு பிறகு சோயிப் பஷீர் வீசிய பந்தை தடுத்து ஆட முற்ப்பட்டப்போது துரதிருஷ்டவசமாக பந்து பேட்டில் பட்டு ஸ்டம்பில் விழுந்து இந்தியாவின் வெற்றி கனவை தகர்த்தது. இந்தப்போட்டியில் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இறுதிவரை போராடிய ஜடேஜா 61 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ONE OF THE MOST HEARTBREAKING MOMENTS IN INDIAN TEST HISTORY 💔 pic.twitter.com/nTNR5FGaTh
— Johns. (@CricCrazyJohns) July 14, 2025
இந்த போட்டியில் இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸ்சில் பும்ரா 54 பந்துகளும், சிராஜ் 30 பந்துகளும், ஜடேஜா 181 பந்துகளும் பேட்டிங் ஆடினர் என்பது குறிப்பிடத்தக்கது





















