மேலும் அறிய
Chicken Chilli Bajji: சுவையான சிக்கன் மிளகாய் பஜ்ஜி செய்வது எப்படி? ரெசிபி இதோ!
Chicken Chilli Bajji: சிக்கன் 65 , பெப்பர் சிக்கன், ஜிஞ்சர் சிக்கன் செய்து போர் அடித்துவிட்டதா? அப்போ ஒரு முறை இந்த சிக்கன் மிளகாய் பஜ்ஜி செய்து பாருங்க சுவையாக இருக்கும்.

சிக்கன் மிளகாய் பஜ்ஜி
1/7

தேவையான பொருட்கள்: எண்ணெய் - 1 மேசைக்கரண்டி , வெங்காயம் - 1 நறுக்கிய, பச்சை மிளகாய் - 1 நறுக்கிய, இஞ்சி - 1 நறுக்கிய, பூண்டு - 6 பற்கள் நறுக்கிய , தக்காளி - 2 நறுக்கிய, மல்லி தூள் - 1 தேக்கரண்டி, சீரகத்தூள் - 1 தேக்கரண்டி, கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி, கொத்தமல்லி இலைகள், கடலை மாவு - 2 கப், மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, ஓமம் - 1/2 தேக்கரண்டி , உப்பு, தண்ணீர்.
2/7

செய்முறை: முதலில் குக்கரில் சிக்கன் , இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நான்கு விசில் வரும் வரை வேக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
3/7

அதனோடு வேகவைத்த சிக்கன் தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும்.வெந்த சிக்கன் துண்டுகளை ஆறவைத்து சிறிது சிறிதாக பிய்த்து வைத்துக்கொள்ளவும்.
4/7

அடுத்தது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை பொன்னிறமாக வதக்கவும்
5/7

அதன்பிறகு தக்காளி, மிளகாய்த்தூள், மல்லி தூள், சீரகத்தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்றை சேர்க்கவும். அடுத்தது பிய்த்து வைத்துள்ள சிக்கனை கடாயில் சேர்த்து 5 நிமிடம் வதக்கும். அதன் பிறகு சிக்கன் தண்ணீரை கடாயில் சேர்த்து கொத்தமல்லி சேர்த்து இறக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
6/7

அடுத்தது ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய் தூள், ஓமம் ,உப்பு,தண்ணீர் ஆகியவற்றை கலந்து பஜ்ஜி மாவு தயார் செய்து வைத்துக் கொள்ளவும். அதன் பிறகு ஒரு பஜ்ஜி மிளகாயை நடுவில் கீறி விதைகளை நீக்கி சிக்கன் கலவையை மிளகாயின் உள்ளே நிரப்பி வைத்துக் கொள்ளவும்.
7/7

அடுத்தது பஜ்ஜி மாவில் தோய்த்து, எண்ணெயில் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்தால் சூடான மற்றும் சுவையான சிக்கன் மிளகாய் பஜ்ஜி தயார்.
Published at : 04 Aug 2024 09:15 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
விளையாட்டு
க்ரைம்
இந்தியா
Advertisement
Advertisement