மேலும் அறிய
Tamilnadu Roundup: பிரதமரிடம் முதல்வர் மனு, காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை, அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள் - 10 மணி செய்திகள்
Tamilnadu Headlines(28.07.25): தமிழ்நாட்டில் இன்று காலை முதல் தற்போது வரை நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகளை தற்போது தலைப்புச் செய்திகளாக காணலாம்.

10 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABP
- தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை விடுவிக்க பிரதமரிடம் முதல்வர் சார்பில் மனு. 10 ஆண்டுகளுக்கு முன் அறிவித்த ரயில் திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தல்.
- மாநிலங்களவைக்கு தேர்வான அதிமுக எம்.பி-க்கள் ம. தனபால், இன்பதுரை ஆகியோர் இன்று உறுப்பினர்களாக பதவியேற்க உள்ளனர்.
- கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு இன்று தொடங்கம். ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நடைபெறும்.
- சென்னையில் பாஜக மாநில நிர்வாகியின் சகோதரர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சி.
- தங்கத்தை கம்பி போல வளைத்து உள்ளாடைக்குள் வைத்து கடத்திய 2 பேர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- சேலம் மேட்டூர் அணையிலிருந்து 1,00,400 கனஅடி நீர் திறப்பால் காவிரி கரையோர 11 மாவட்டங்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
- வெள்ள அபாய எச்சரிக்கையை கருத்தில்கொண்டு மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள். உபரி நீரை சேமிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்.
- கர்நாடக அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1.05 லட்சம் கனஅடியாக உயர்வு. குளிக்கவும், பரிசல் இயக்கவும் 3-வது நாளாக தடை.
- ஆடிப்பூர விழாவை ஒட்டி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. விடுமுறையை ஈடுசெய்ய ஆகஸ்ட் 9-ம் தேதி வேலைநாளாக அறிவிப்பு.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















