Chennai Power Shutdown: சென்னையில ஜூலை 29-ம் தேதி செவ்வாய் கிழமை எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்க தெரியுமா.?
Chennai Power Cut(29-07-2025): சென்னையில், நாளை மின் தடை செய்யப்பட உள்ள இடங்கள் குறித்த விவரங்களை தற்போது தெரிந்துகொள்ளலாம்.

சென்னையில், மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகளுக்காக, நாளை சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில், அதாவது காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஜூலை 29-ம் தேதி, அதாவது நாளை மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கே.கே.நகர்
வளசரவாக்கம், விருகம்பாக்கம், ஆழ்வார் திருநகர்.
தாம்பரம்
மாடம்பாக்கம், வேங்கைவாசல், மப்பேடு, அகரம்தென், படுவஞ்சேரி, கஸ்பாபுரம், செக்ரிடேரியட் காலனி, கேம்ப் ரோடு, செம்பாக்கம், அகரம் மெயின் ரோடு, சேலையூர், விஜிபி சீனிவாச நகர், விஜிபி சரவணா நகர், காயத்ரி நகர், கிருஷ்ணா நகர், திருவாஞ்சேரி, நத்தஞ்சேரி, கணபதி நகர், நந்தா நகர், பாரதிதாசன் நகர், சக்தி நகர், காயத்திரி கார்டன், ராஜகீழ்பாக்கத்தின் ஒரு பகுதி, கவுரிவாக்கம், சந்தோஷபுரம், ரிக்கி கார்டன், ராஜாஜி நகர், சுந்தரம் காலனி, பராசக்தி நகர், சத்தியசாயி நகர், கோகுல் நகர், ஷா அவென்யூ, காமராஜ் நகர், ஜெயேந்திர நகர், தாரகேஸ்வரி நகர், கேவிஐசி நகர், வேளச்சேரி மெயின் ரோடு, பழனியப்பா நகர், சாந்தம்மாள் நகர், விக்னராஜபுரம், விஜயநகரம், கே.கே.சாலை, சிவகாமி நகர், பத்மாவதி நகர், அலமேலுபுரம், கண்ணன் நகர், இந்திரா நகர், சோழன் நகர், சுதர்சன் நகர், டியானா ஸ்கை சிட்டி, திருமால் நகர், அன்னை சத்யா நகர், கணேஷ் நகர், மாருதி நகர், ஸ்ரீ தேவி நகர்.
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.





















