பொறியியல் கலந்தாய்வு: கம்ப்யூட்டர் சயின்ஸ் மோகம்! டாப் அரசு, தனியார் கல்லூரிகள் பட்டியல் இதோ!
TNEA 2025 Analysis: குறைந்தபட்சமாக மெக்கானிக்கல் மற்றும் சிவில் சார்ந்த துறைகளில் முறையே 1621 இடங்களும் 735 இடங்களும் மட்டுமே நிரம்பி உள்ளன.

2025- 26ஆம் கல்வி ஆண்டில் பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்பட்ட கலந்தாய்வில் முதல் சுற்று நிறைவடைந்துள்ளது. இதில், பொதுப் பிரிவில் 39145 மாணவர்களும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 2662 மாணவர்களும் என 41807 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இதில் பொதுப் பிரிவில் 26719 பேருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களில் 2177 பேருக்கும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 425 கல்லூரிகளில், 28896 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கணினி அறிவியல் சார்ந்த துறைகளில் மாணவர்கள் ஆர்வம்
இதில் அதிகபட்சமாக கணினி அறிவியல் சார்ந்த துறைகளில் அதிகபட்சமாக 17,251 இடங்கள் நிரம்பி உள்ளன. மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு சார்ந்த துறைகளில் (இசிஇ) 5179 இடங்களும் மின்னியல் மற்றும் மின்னணுவியல் சார்ந்த துறைகளில் (இஇஇ) 1623 இடங்களும் நிரம்பியுள்ளன. குறைந்தபட்சமாக மெக்கானிக்கல் மற்றும் சிவில் சார்ந்த துறைகளில் முறையே 1621 இடங்களும் 735 இடங்களும் மட்டுமே நிரம்பி உள்ளன.
200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்ற 116 மாணவர்களில் 63 பேர் கணினி அறிவியல் படிப்பையே தேர்வு செய்துள்ளனர்.
100 சதவீத இடங்கள் நிரம்பியது எங்கே?
மத்திய அரசின் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் மட்டும் 100 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன. எனினும் இங்கு 31 இடங்கள் மட்டுமே உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதில் மாணவர்களால் அதிகம் எடுக்கப்பட்ட 10 அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளின் பட்டியல் இதோ!
- CECRI (மத்திய அரசின் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம்)
- CEG வளாகம் (அண்ணா பல்கலை, கிண்டி பொறியியல் கல்லூரி)
- MIT
- சிஐடி (கோயம்புத்தூர் தொழில்நுட்ப நிறுவனம்), கோயம்புத்தூர்
- தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை
- PSG தொழில்நுட்ப கல்லூரி, கோயம்புத்தூர்
- ஜிசிடி (அரசு தொழில்நுட்ப கல்லூரி) கோவை
- கட்டிடக் கலை மற்றும் திட்டமிடல் பள்ளி, சென்னை (B.Plan-க்கு)
- அரசு பொறியியல் கல்லூரி சேலம்
- அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரி, காரைக்குடி

டாப் தனியார் கல்லூரிகள்: (50%-க்கும் அதிகமான இடங்களை நிரப்பிய கல்லூரிகள்)
1. SSN பொறியியல் கல்லூரி, சென்னை
2. சென்னை தொழில்நுட்ப நிறுவனம் (சிஐடி), சென்னை
3. PSG தொழில்நுட்பம் மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், கோயம்புத்தூர்
4. ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கோயம்புத்தூர்
5. குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி
6. லயோலா ICAM சென்னை
7. கற்பகம் பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர்
8. RIT ராஜலட்சுமி தொழில்நுட்ப நிறுவனம், சென்னை
9.ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி, சென்னை
10. ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, கோயம்புத்தூர்






















