(Source: ECI | ABP NEWS)
Youtuber: ”வீடு கட்ட காசு வேணும்“ காதல் மனைவியை டார்ச்சர் செய்த டெக் சூப்பர் ஸ்டார் சுதர்சன்? தலைமறைவு?
Youtuber Tech Super Star: தேனியை சேர்ந்த டெக் சூப்பர் ஸ்டார் எனும் யூடியூபல் சேனலை நடத்தி வரும், சுதர்சன் மீது வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Youtuber Tech Super Star: தேனியை சேர்ந்த டெக் சூப்பர் ஸ்டார் எனும் யூடியூபல் சேனலை நடத்தி வரும், சுதர்சன் மீது அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
யூடியூபர் சுதர்சன்:
மதுரையை சேர்ந்த சுதர்சன் என்பவர் யூடியூப் சேனலில் செல்போன் மற்றும் கணினி உள்ளிட்ட, மின்சாதனங்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கி பிரபலமானவர் ஆவார். அண்மையில் சொந்தமாக டெக் சூப்பர் ஸ்டார் எனும் யூடியூப் சேனலை தொடங்கினார். இதற்கு 16 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்க்ரைபர்களும் உள்ளனர். அவப்போது சில சர்ச்சைகளில் சிக்கி விளக்க வீடியோக்களையும் சுதர்சன் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் தான் அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் காவல்துறை தற்போது யூடியூபர் மீது வரதட்சணை வழக்கு பதிவு செய்துள்ளது. சொந்த வீடு கட்டுவதற்கான மாமனார் வீட்டில் இருந்து கூடுதல் நகையை பெற்று வரும்படி, தனது காதல் மனைவிக்கே வரதட்சணை கொடுமை அளித்ததாக புகார் எழுந்துள்ளது.
காதல் மனைவிக்கு டார்ச்சர்
தேனியை சேர்ந்த மருத்துவர் விமலா தேவி எனும் பெண்ணை காதலித்து வந்த சுதர்சன், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருவீட்டார் சம்மதத்துடன் அவரை திருமணம் செய்துள்ளார். அப்போது 30 சவரன் நகை, 5 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் வரதட்சணையாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனக்கு மேலும் 20 சவரன் நகைகள் வேண்டும் என சுதர்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் மிரட்டுவதாக, கடந்த 27ம் தேதி விமலா தேவி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் வரதட்சணை கொடுமை மற்றும் கொலை மிரட்டல் விடுப்பது உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக சுதர்சனை விரைவில் நேரில் அழைத்து விசாரிக்கவும் காவல்துறை முடிவு செய்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பாக காவல்துறை முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையின் போது கூட, விமலா தேவியின் தந்தையிடம் மேலும் 20 பவுன் நகை கொடுத்தால்தான் தனது மனைவி மற்றும் குழந்தையை அழைத்துச் செல்வதாக சுதர்சன் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரதட்சணை கொடுமை சர்ச்சை:
அண்மையில் தான், வரதட்சணை கொடுமையை தாங்க முடியாமல், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரிதன்யா எனும் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கியது. அதைடொடர்ந்து, திருவள்ளூரில் வரதட்சணை கொடுமையால் திருமணமான நான்காவது நாளிலேயே இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட உள்ளிட்ட சம்பவங்களும் அடுத்தடுத்து அரங்கேறி பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் ஏற்கனவே பல பிரச்னைகளில் சிக்கிய டெக் சூப்பர் ஸ்டார் சுதர்சன் தற்போது, மனைவிக்கு வரதட்சணை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
டெக் சூப்பர் ஸ்டாருக்கு சிக்கல்
பல ரிவ்யூவர்களும் பணத்தை பெற்றுக்கொண்டு மின்சாதன பொருட்களுக்கு சாதகமான விமர்சனங்களை வழங்கி வருவதாகவும் நான் நேர்மையாக நடந்து கொள்வதாகவும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இதனை நம்பி பொதுமக்கள் பலரும் சுதர்சனுக்கு ஏகபோக வரவேற்பு அளித்தனர். ஆனால், கடைசியில் இவரே பணம் பெற்றுக்கொண்டு, மற்ற யூடியூபர்கள் மீது பரப்பி வந்தது காலப்போக்கி அம்பலமானது.இதனால் அவருக்கு மக்கள் அளித்து வந்த ஆதரவு குறைந்ததோடு, சேனைலின் வியூஸ்களும் கடுமையாக சரிந்தது.
இந்நிலையில் தான், வரதட்சணை கொடுமை அளித்ததாக சுதர்சன் அவரது தாயார் மாலதி, தந்தை சுந்தர்ராஜன் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





















