ஆடி மாதம் வேண்டுதல்.. சூலாயுதத்துடன் தீ மிதித்த நடிகர் புகழ்.. வெளியான முக்கிய அறிவிப்பு
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த புகழ் ஆடி மாதத்தை முன்னிட்டு தீ மிதித்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது நிகழ்ச்சியில் பெண் வேடமிட்டு காமெடியில் கலக்கியவர் புகழ். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவோடு வந்தவர் சின்னத்திரையில் காமெடியில் கலக்கி வருகிறார். குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தார். நடிகை பவித்ரா லட்சுமி, ரம்யா பாண்டியன், சிருஷ்டி டாங்கே போன்ற நடிகைகளுடன் இணைந்து சமைத்து காமெடியில் ஸ்கோர் வாங்கியவர் புகழ். குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களின் வரவேற்பை பெற இவரும் ஒரு காரணமாக இருந்துள்ளார்.
சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தாலும் அயோத்தி, சபாபதி போன்ற படங்களிலும் நடிக்க தொடங்கினார். சபாபதி படத்தில் சந்தானத்துடன் இணைந்து காமெடியில் கலக்கினார். அதைத்தொடர்ந்து என்ன சொல்ல போகிறாய் படத்தில் முழு நீள காமெடியனாக வலம் வந்தார். தற்போது மிஸ்டர் ஜூ கீப்பர் படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகம் ஆகவுள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றது.
வனப்பகுதியில் பாதுகாவலராக புகழ் நடித்திருக்கிறார். இயக்குநர் ஜே.சுரேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜீரோ படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் அனிமேஷன் இல்லாமல், உண்மையான புலியை நடிக்க வைத்திருப்பதாகப் படக்குழு தெரிவித்தது. இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி அடிக்கடி மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி மிஸ்டர் ஜூ கீப்பர் படம் ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளது. இப்படம் புகழ் கரியரில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் புகழ் ஆடி மாதத்தை முன்னிட்டு கடலூரில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு விரதம் இருந்து பொங்கல் வைத்து தனது வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார். தனது குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றிருக்கும் அவர், தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினார். இதுதொடர்பான வீடியோவை நடிகர் புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ஆண்டவா எல்லாரும் எப்பவும் மனநிம்மதியோட, எந்த தொந்தரவும் இல்லாம சந்தோஷமா இருக்கனும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram





















