எத்தனை லவ் தெரியுமா?.. இதயம் உடைந்தது.. நல்ல பர்சன் கிடைத்தால் நாளைக்கே திருமணம் தான்!
திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாகவே வலம் வரும் நடிகை நித்யா மேனன் திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள தலைவன் தலைவி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை பார்த்த அனைவரும் திருமணம் ஆன அனைவரும் பார்க்க வேண்டிய படம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். விமர்சனங்களும் பாசிட்டிவாகவே வந்திருக்கிறது. விஜய் சேதுபதி மற்றொரி ஹிட் படமாகவும் அமைந்திருக்கிறது.
திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு நித்யா மேனன் தமிழில் அதிக படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அவர் ஏற்று நடிக்கும் கதாப்பாத்திரங்களும் மக்களின் வரவேற்பை பெற்று வருகிறது. தலைவன் தலைவி படத்ததில் பேரரசி கதாப்பாத்திரமும் ரசிகர்களின் பேரன்பை பெற்றுள்ளது. ரீலில் திருமணம் ஆன பெண்ணாகவும், ஒரு குழந்தைக்கு தாயாகவும் நித்யா நடித்து வருகிறார். தனது மார்க்கெட் சரியும் என்பதை பற்றி கவலைப்படுவதில்லை. அந்த கதாப்பாத்திரத்திற்கு தேவையா என்பதை பொறுத்து இதுபோன்ற படங்களில் நடிப்பதாக அவரே தெரிவித்திருக்கிறார்.
நிஜ வாழ்க்கையில் முரட்டு சிங்கிளாக இருக்கும் நித்யா மேனன் தற்போது திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். நான் அதிகம் தனியாகத் தான் இருப்பேன். எத்தனை முறை காதலில் விழுந்தேனோ அத்தனை முறையும் என் இதயம் உடைந்து போனது. எனது துணையுடன் ஒரு அழகான வாழ்க்கையை வாழ பலமுறை ஆசைப்பட்டிருக்கிறேன். ஆனால், அப்படிப்பட்ட ஒருவர் எனக்கு கிடைக்கவில்லை என்பது வருத்தம் தான். நல்ல இணையர் கிடைத்தால் நாளைக்கே திருமணம் செய்துகொள்ள ரெடிதான். ஒரு பெண் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால் தோல்வி அடைந்தவராக பார்கிறார்கள். தங்களின் காதலை தேடி பிடித்து திருமணம் செய்துகொள்வது எல்லோருக்கும் ஈஸி இல்லை. எனக்கு திருமணம் நடந்தால் சந்தோசம், இல்லை என்றாலும் ஓகே என நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.





















