மேலும் அறிய

அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா: மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியங்கள்- வெளிநாட்டுப் பயணம் உட்பட!

2025- 26ஆம் ஆண்டுக்கான கலைத் திருவிழா போட்டிகள் ஆகஸ்ட் 4 முதல் நவம்பர் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளன.

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் போட்டிகள் அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனியாகவும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்குத் தனியாகவும் நடத்தப்படுகின்றன.

2025- 26ஆம் ஆண்டுக்கான கலைத் திருவிழா போட்டிகள் ஆகஸ்ட் 4 முதல் நவம்பர் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளன.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

2022- 23ஆம் ஆண்டு முதல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த கல்வி ஆண்டிலும் மாணவர்களுக்குக் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

எவ்விதக் கட்டணமும் இல்லை

1, 2 ம் வகுப்புகள், 3, 4, 5-ம் வகுப்புகள், 6, 7, 8-ம் வகுப்புகள், 9, 10-ம் வகுப்புகள், 11, 12-ம் வகுப்புகள் என 5 பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தப் போட்டிகளுக்கு எவ்விதக் கட்டணமும் வசூலிக்கப்படக் கூடாது.

சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவ-மாணவிகள் போட்டிகளில் கலந்துகொள்வதை உறுதிசெய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

என்னென்ன போட்டிகள்?

இந்த ஆண்டு 'பசுமையும், பாரம்பரியமும்' என்ற கருத்தின் அடிப்படையில் போட்டிகள் நடைபெறுகின்றன. கதை கூறுதல், வண்ணம் தீட்டுதல், மாறுவேடம், பேச்சு, திருக்குறள் ஒப்பித்தல், மெல்லிசை, நாட்டுப்புற நடனம், பரதநாட்டியம், மணல் சிற்பம், வில்லுப்பாட்டு, கிராமிய நடனம், நகைச்சுவை, பலகுரல் பேச்சு, பம்பை, உடுக்கை, பறை, மிருதங்கம், டிரம்ஸ், வயலின், நாதஸ்வரம், கீபோர்டு இசைத்தல், பொம்மலாட்டம் உட்பட பல்வேறு வகைகளில் போட்டிகள் நடத்தப்படும்.

முதல்கட்டமாக, 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளி அளவிலான போட்டிகள் ஆகஸ்ட் 4 முதல் 18ஆம் தேதி வரை நடைபெறும். அதைத் தொடர்ந்து, குறுவட்ட அளவில் ஆகஸ்ட் 25 முதல் 29 வரை நடக்க உள்ளன. வட்டார அளவில் அக். 13 முதல் 17 வரையும் மாவட்ட அளவில் அக்.27 முதல் 31 வரையும் நடக்கின்றன. மாநில அளவில் நவம்பர் 24 முதல் 28ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறும்.


அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா: மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியங்கள்- வெளிநாட்டுப் பயணம் உட்பட!

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, போட்டிகளை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலையரசன், கலையரசி விருதுகள்

மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு கலையரசன், கலையரசி விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தத் தரவரிசையில் முதல் 25 இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள், வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

"எங்கள் வாழ்நாளைப் பள்ளிக்கே தந்துவிட்டோம்!" - அமைச்சரிடம் மனு அளித்து கதறிய பகுதிநேர ஆசிரியர்கள்!
கலெக்டரோட ஒரு கப் 'காபி'... அரசுப் பள்ளி மாணவர்களின் கனவுகளுக்குக் கிடைத்த 'சூப்பர்' சிறகுகள்!
கலெக்டரோட ஒரு கப் 'காபி'... அரசுப் பள்ளி மாணவர்களின் கனவுகளுக்குக் கிடைத்த 'சூப்பர்' சிறகுகள்!
MBBS Apply: டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: குடைச்சல் கொடுக்கும் விசிக, காம்ரேட்கள்..! இடைத்தேர்தலுக்காக காத்திருக்கும் CM விஜய் - உத்தரவு வருமா?
குடைச்சல் கொடுக்கும் விசிக, காம்ரேட்கள்..! இடைத்தேர்தலுக்காக காத்திருக்கும் CM விஜய் - உத்தரவு வருமா?
TN Weather News: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
Piaggio Scooter: ஸ்கூட்டர் கிங் ஆக்டிவாவிற்கு போட்டியாக களமிறங்கும் பியாஜியோ - மலிவு விலை, அம்சங்கள், வசதிகள்
ஸ்கூட்டர் கிங் ஆக்டிவாவிற்கு போட்டியாக களமிறங்கும் பியாஜியோ - மலிவு விலை, அம்சங்கள், வசதிகள்
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
Embed widget