ஆளே மாறிட்டாங்களே.. அழகோ அழகுதான்.. ஹோம்லி லுக்கில் அசத்தும் பிரபல நடிகை!
டிராகன் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகையின் புகைப்படம் இணையத்தில் வைரல்.

தெலுங்கு படமான அல்லூரி படத்தில் நடித்த கயாடு லோஹர், தமிழில் டிராகன் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். டிராகன் படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இப்படத்தில் காதல் டூயட்டிலும் கலக்கியிருந்தார். நடிகை அனுபமாவை இவருக்கு அதிகம் ஸ்கோப் இருந்ததாகக் கூறப்பட்டது. தமிழில் தற்போது சென்ஷேன் ஹீரோயினாக வலம் வரும் கயாடு லோஹர், இதயம் முரளி, எஸ்டிஆர் 49 படங்களில் பிஸியாக இருக்கிறார். அதைத்தொடர்ந்து மலையாளத்திலும் அம்மணி பிஸியாக இருக்கிறார்.
அவ்வப்போது சமூகவலைதலங்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்வார். அதேபோன்று பள்ளி மற்றும் கல்லூரி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு அசர வைப்பார். இடத்திற்கு ஏற்றார் போல் உடை அணிந்து ரசிகர்களை கவரும் கயாடு லோஹர் தமிழ் கற்றுக்கொள்வதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வருவதற்கான அனைத்து யோகமும் அம்மணியிடம் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், ஜி.வி.பிரகாஷ் குமாருடன் இம்மார்ட்டல் படத்திலும் நடித்து வருகிறார்.
ஓரே குளியல் அறையில் இருவரும் இருப்பது போன்ற போஸ்டர் வெளியானது. கயாடு லோஹர் டிராகனை காட்டிலும் உச்சக்கட்ட கவர்ச்சி என்றும் கிசுகிசுக்கப்பட்டது. கிளாமர் குயின் என்ற பெயரையும் கயாடு லோஹர் பெற்றிருக்கிறார். ஒரே நேரத்தில் பல மொழிப்படங்களில் நடித்து வரும் கயாடு லோஹரின் புதிய லுக்கை பார்த்து ரசிகர்களே ஏமாந்துவிட்டனர். கயாடு லாஹர்தானா என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு அவரது புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
குட்டை தாவணியில் குடும்ப பாங்கான பெண்ணாக கயாடு லோஹர் இருக்கிறார். பெரிய கண்ணாடி அணிந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார். இந்த புகைப்படத்தை கயாடு லோஹர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். பாட்டியின் கண்ணாடியை வாங்கி தான் மாட்டிக் கொண்டதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.





















