மேலும் அறிய
Advertisement

Reshma Pasupuleti : பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுகிறாரா நடிகை ரேஷ்மா...இன்ஸ்டாகிராம் பதிவால் பரபரப்பு
விஜய் தொலைக்காட்சி பாக்கியலட்சுமி தொடரில் இருந்து நடிகை ரேஷ்மா விலக இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன

ரேஷ்மா பசுபுலேட்டி , பாக்கியலட்சுமி
1/6

வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தின் மூலம் பரவலான கவனமீர்த்தவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இன்ஸ்டாகிராமில் இவரது மாடலிங் ஃபோட்டோஷூட்கள் ரசிகர்களிடம் பிரபலமானவை
2/6

திரைப்படங்களைக் காட்டிலும் சீரியலில் இவருக்கு அதிக வாய்ப்புகள் அமைந்தன. ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீதா ராமம் , அபி டெய்லர் உள்ளிட்ட தொடர்களில் வில்லியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்
3/6

சீரியலில் வில்லியாக மட்டுமே நடித்துவந்த ரேஷ்மா தற்போது விஜய் டிவியில் பாக்கியலட்சுமி தொடரில் முக்கிய கதாபாத்திரமான ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் பாக்கியாவிற்கு தோழியாக இருந்து தற்போது கோபியின் இரண்டாவது மனைவியாக மாறியிருக்கிறார்
4/6

நடிகை ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராமில் பாக்கியலட்சுமி குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளது சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5/6

பாக்கியலட்சுமி தொடரில் இருந்து ரேஷ்மா விலக இருப்பதாகவும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது
6/6

இது குறித்து ரேஷ்மா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை என்பது பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு ஒரு ஆறுதல்.
Published at : 15 Nov 2024 01:43 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
க்ரைம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion