Income Tax Structure Change: ஏப்ரல் 1 - மொத்தமாய் மாறும் வருமான வரி விதிகள், எப்படி லாபம் பார்க்கலாம் - புதிய Vs பழைய அமைப்பு
Income Tax Structure Change: வரும் ஏப்ரல் 1ம் தேதி தொடங்கும் 2025-26 நிதியாண்டு முதல், பொதுமக்களுக்கான வருமான வரி விதிகள் மொத்தமாய் மாற உள்ளன

Income Tax Structure Change: புதிய வருமான வரி விதியில் பொதுமக்கள் லாபம் பார்ப்பது எப்படி? எந்த வரி விதிப்பு முறையை தேர்வு செய்யலாம் என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி விதிகளில் மாற்றம்:
வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 2025-26 நிதியாண்டு தொடங்குவதை ஒட்டி, அன்று முதல் புதிய வரி விதிப்பு முறையும் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது. அதன் மூலம், 12 லட்சம் ரூபாய் வரையிலான ஆண்டு வருமானம் பெறுபவர்கள் வருமான வரி சுமையிலிருந்து விடுபடுவார்கள். அதோடு நிலையான வருமான வரி கழிப்பாக ரூ.75 ஆயிரம் விலக்கப்படுவாதல், ஆண்டிற்கு மொத்தம் 12.75 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் எந்தவித வரியும் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் இந்த சலுகையை பெற பயனர்கள் புதிய வரி விதிப்பு முறையைத் தேர்வு செய்ய வேண்டும்.
லாபமா? நஷ்டமா?
இப்போது ரூ.12 லட்சத்திற்கு மேல் சம்பளம் பெற்று புதிய வரி முறையைத் தேர்ந்தெடுத்தவர்கள், அதனால் பயனடைவார்களா அல்லது இழப்பைச் சந்திப்பார்களா என்ற கேள்வி எழுகிறது. அதோடு, பழைய வரி முறையைத் தேர்ந்தெடுத்து 12 லட்சத்திற்கு மேல் சம்பளம் பெற்றவர்கள், பயனடைவார்களா அல்லது இழப்பைச் சந்திப்பார்களா? என்ற சந்தேகமும் எழுகிறது.
பழைய Vs புதிய வரி விதிப்பு முறை:
பழைய வரி முறையிலிருந்து புதிய வரி முறைக்கு மாறும் பயனர்கள் முதலில் புதிய வரி முறை தங்களுக்கு சிறந்ததாக இருக்குமா அல்லது பழைய வரி முறை நன்மை பயக்குமா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பழைய வரி முறையில், 80c, NPS, HRA, 80 TTA மற்றும் சுகாதார காப்பீட்டு பிரீமியத்திற்கு பிரிவு 80D இல் விலக்கு கிடைக்கிறது. அதே நேரத்தில் புதிய வரி முறையில், NPS-க்கு முதலாளியின் பங்களிப்புக்கு பிரிவு 80CCD (2) இன் கீழ் விலக்கு உட்பட சில விலக்குகள் மட்டுமே கிடைக்கின்றன. மேலும், தொலைபேசி மற்றும் போக்குவரத்துக்கு பெறப்பட்ட தொகைக்கு வரி விலக்கு கிடைக்கிறது.
பழைய வரி முறையில், பிரிவு 80CCD (2) இன் கீழ் அடிப்படை சம்பளத்தில் 10% வரை கழிக்க அனுமதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் புதிய வரி முறையில் இது 14% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய வரி விதிப்பு முறை வரி சேமிப்புக்கு வழிவகுப்பதோடு, செயல்முறை மிகவும் நெறிப்படுத்தப்படும். ஏனெனில் இது விலக்குகள் மற்றும் கழிப்பை கோருவதற்கு ஆதாரங்களை ஏற்பாடு செய்து பதிவுகளைப் பராமரிக்க வேண்டிய அவசியத்தை நீக்குகிறது.
புதிய வரி விதிப்பு முறை - திருத்தப்பட்ட வரி அடுக்குகள்
- ரூ. 4 லட்சம் வரை – வரி இல்லை
- ரூ 4 லட்சம் – ரூ 8 லட்சம் – 5%
- ரூ 8 லட்சம் – ரூ 12 லட்சம் – 10%
- ரூ 12 லட்சம் – ரூ 16 லட்சம் – 15%
- ரூ 16 லட்சம் – ரூ 20 லட்சம் – 20%
- ரூ 20 லட்சம் – ரூ 24 லட்சம் – 25%
- ரூ. 24 லட்சத்திற்கு மேல் – 30%
மேற்குறிப்பிடப்பட்ட வரி விகிதங்களானது,ரூ.12.75 லட்சம் என்ற ஆண்டு வருமானத்தை கடந்தவர்களிடம் இருந்து வசூலிக்க பயன்படுத்தப்படும் வரி விதிப்பு முறையாகும்.
வெவ்வேறு வருமான பிரிவுகளுக்கான வரி சேமிப்பு
புதிய வரி விதிப்பு முறையின் கீழ்,
- ரூ.12 லட்சம் வருமானம் கொண்டவர்கள் ரூ.80,000 வரை சேமிப்பார்கள் (தற்போதுள்ள விகிதங்களிலிருந்து 100% வரி குறைப்பு)
- ரூ.18 லட்சம் வருமானம் கொண்டவர்கள் ரூ.70,000 சேமிப்பார்கள் (30% வரி குறைப்பு)
- ரூ.25 லட்சம் வருமானம் கொண்டவர்கள் ரூ.1,10,000 சேமிப்பார்கள் (25% வரி குறைப்பு)
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

