SRH Vs RR: பராக் Vs கம்மின்ஸ் - நாக்-அவுட்டிற்கு பழிவாங்குமா ராஜஸ்தான்? மீண்டும் ரன்மழை பொழியுமா ஐதராபாத்?
IPL 2025 SRH Vs RR: ஐபிஎல் தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன.

IPL 2025 SRH Vs RR: ஐபிஎல் தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஐபிஎல் 2025:
டி20 கிரிக்கெட்டின் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐபிஎல் தொடரின், நடப்பாண்டு எடிஷன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில், நடப்பு சாம்பியனான கொல்கத்தாவை ஊதி தள்ளி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. அதைதொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையான இன்று ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. ஆதன்படி, தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன.
ஐதராபாத் Vs ராஜஸ்தான்:
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் சன்ரைச்ர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத உள்ளன. ஐதராபாத் அணிக்கு பேட் கம்மின்ஸ் தலைமை தாங்குகிறார்.ராஜஸ்தான் அணிக்கு முதல் 3 போட்டிகளுக்கு ரியான் பராக் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் போட்டி இந்திய நேரப்படிபிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ ஸ்டார் செயலியிலும் கண்டுகளிக்கலாம்.
பராக் Vs கம்மின்ஸ்
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இரண்டாவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத உள்ளன. தனது அதிரடியான பேட்டிங் மூலம் கடந்த ஆண்டு ஐதராபாத் அணி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதைதொடரும் வகையில் இந்த ஆண்டும், ட்ராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதிஷ் குமார், கிளாசென் என வலுவான பேட்டிங் லைன் - அப் தொடர்கிறது. அவர்களுக்கு உறுதுணையாக பேட் கம்மின்ஸ், ராகுல் சாஹர், ஹர்ஷல் படேல் மற்றும் முகமது ஷமி என தரமான பவுலிங் யூனிட்டும் அந்த அணியில் உள்ளது.
ராஜஸ்தான் அணியை பொறுத்தமட்டில் பிளேயிங் லெவனிற்கு தேவையான சரியான கலவையில் வீரர்களை கொண்டுள்ளது. பேட்டிங்கிற்கு ஆதரமாக ஜெய்ஷ்வால், சாம்சன், ரியான் பராக், நிதிஷ் ராணா, ஹெட்மேயர், ஜுரெல் ஆகியோர் இருக்க, பந்துவீச்சில் ஹசரங்கா, ஆர்ச்சர், தீக்ஷனா மற்றும் சந்தீப் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த பவுலிங் யூனிட் ஐதராபாத்தின் பேட்டிங் பட்டாளத்தை கட்டுப்படுத்துமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். அதேநேரம், கடந்த ஆண்டு நாக்-அவுட் சுற்றில் ஐதாராபாத்திடம் பெற்ற தோல்விக்கு, பழிவாங்கும் முனைப்பிலும் ராஜஸ்தான் இன்று களமிறங்குகிறது.
நேருக்கு நேர்
ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 20 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ஐதராபாத் அணி 11 முறையும், ராஜஸ்தான் அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த கணக்குகளை ராஜஸ்தான் மேம்படுத்துமா? அல்லது ஐதராபாத் வெற்றியை தொடருமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
ஐதராபாத் மைதானம் எப்படி?
ராஜீவ் காந்தி சர்வதேச மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானதாக கருதப்படுகிறது. அதேநேரம் பந்து வீச்சாளர்கள் ஆரம்பத்தில் கூடுதல் பவுன்ஸ் பெறலாம். வரலாற்று ரீதியாக, சேஸிங் அணிகள் இங்கு ஆதிக்கம் செலுத்தியுள்ளன, ஏனெனில் ஆட்டம் முழுவதும் மேற்பரப்பு சீராக உள்ளது.
வானிலை நிலவரம்
மழை இன்றைய ஆட்டத்தை கெடுக்கும் வாய்ப்புகள் உள்ளன. வானிலை முன்னறிவிப்பு, போட்டி நாளில் இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்று கணித்துள்ளது. இது தொடக்கத்தை தாமதப்படுத்தக்கூடும். இருப்பினும், முழுமையான போட்டியை மழை பாதிக்க வாய்ப்பில்லை.
உத்தேச பிளேயிங் லெவன்
ஐதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அபினவ் மனோகர், வியான் முல்டர்/கமிந்து மெண்டிஸ், பாட் கம்மின்ஸ் (C), ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர், முகமது ஷமி.
ராஜஸ்தான்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, ரியான் பராக் (கேப்டன்), ஷிம்ரோன் ஹெட்மேயர், துருவ் ஜூரல் (WK), சுபம் துபே, வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மஹீஷ் தீக்ஷனா, சந்தீப் சர்மா.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

